கதையல்ல வரலாறு -2-3: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்

This entry is part 14 of 54 in the series 4 செப்டம்பர் 2011

பதவி இறக்கப்பட்ட முன்னாள் கவர்னர் கியோம் எபேர் தாய் நாடு திரும்புகிறார். போனவர் எத்தனை நாளைக்குதான் மதுபாட்டில்களை திறந்து வைத்துகொண்டு உட்கார்ந்திருப்பது, உணவுண்ண உட்கார்ந்தால் சமையல்காரன் ம்ஸியே முதலில் மதாமை கவனித்து விட்டு வருகிறேன் என்கிறான்; ஒப்பேராவுக்கு போகும் மதாம் எபேரா சாரட்டில் நாய்க்கும் தனக்கும் மட்டுமே இடமிருக்கிறது நீங்கள் இருந்து வீட்டைபார்த்துக்கொள்ளுங்கள் என்கிறாள்; மாளிகைப் பணிப்பெண்கள்கூட தொட்டு பேசாதே என்கிறார்கள். ஆக ஏதாவது செய்தாக வேண்டும்; கொடுக்க வேண்டியதை கொடுத்து பிடிக்கவேண்டியவர்களை பிடித்து திரும்பவும் புதுசேரிக்குப் […]

பேசும் படங்கள்: ஐ..டி ஹைவேயில்.. ரெடியாகுது ”எலி 2011“ டின்னர்….

This entry is part 13 of 54 in the series 4 செப்டம்பர் 2011

கோவிந்த் கோச்சா: பரபரப்பான திருவான்மியூர் ரயில் நிலையத்தில் இருந்து திருவான்மியூர் சிக்னல் வரும் வழி நடைபாதை. ஹீயுண்டாய் கார் ஷோ ரூம் களைகட்டிய சூழல் , ஐடி யுவன் யுவதிகள் நடந்து, காரில், பைக்கில் செல்லும் இடம். அமெரிக்க வருமானத்தை மேட்ச் செய்து வேலை பார்ப்போர், விமானங்களில் பறந்து பறந்து கன்சல்டன்சி தருவோர் என உலக பொருளாதார சூழல் மனிதர்கள் சர்வசாதாரணமாக வந்து போகும் வழியில் இதோ ஒரு பாரம்பரிய தமிழ்க் குடும்பம் சாலையோர நடைபாதையே வீடாக, […]

புதுச்சேரியில் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்தநாள், படத்திறப்பு விழா அழைப்பிதழ்

This entry is part 12 of 54 in the series 4 செப்டம்பர் 2011

நாள்: 05.09.2011, திங்கட்கிழமை. நேரம்: மாலை 6.30 – 8.00 மணி இடம்: இரெவேய் சொசியால் சங்கம், 26, இலப்போர்த் வீதி, புதுச்சேரி- 605 001 சங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களான ஐந்திணை எழுபது, ஐந்திணை ஐம்பது, பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, சிறுகாப்பியங்களான உதயணகுமாரகாவியம், நீலகேசி, பெருங்கதை, இலக்கண நூல்களான புறப்பொருள் வெண்பாமாலை, கல்லாடம், பக்திப் பனுவல்களான திருக்கோவையார், பட்டினத்தார் பாடல்கள் […]

எது சிரிப்பு? என் சிரிப்பா ?

This entry is part 11 of 54 in the series 4 செப்டம்பர் 2011

என்னோடு சிரிக்க வருகிறாயா ஏ மலையே ………. கல்குவாரியாக சிதறிவிடாமல் என்னோடு சிரிக்க வருகிறாயா ஏ நதியே ……….. அணைபோட்ட நாணத்தை உடைத்து என்னோடு சிரிக்க வருகிறாயா ஏ காற்றே ………. மூச்சிலிருந்து பிரிந்து விடாமல் என்னோடு சிரிக்க வருகிறாயா ஏ ஆகயாமே …………… எப்போது கரும்புகை கலைத்து என்னோடு சிரிக்க வருகின்றீர்களா ஏ பறவைகளே ………… இரைகள் தொலைந்ததை மறந்து என்னோடு சிரிக்க வருகின்றீர்களா ஏ மலர்களே ……… ஓ எப்போது சிரித்து கொண்டுதான் இருக்கின்றீர்களோ […]

திண்ணை அட்டவணை – செப்டம்பர் 2,2011

This entry is part 10 of 54 in the series 4 செப்டம்பர் 2011

சோமாலியாவில் காலரா தொற்றுநோய் காரணமாக இதுவரை சுமார் 29,000 குழந்தைகள் கொல்லப்பட்டனர். லண்டன் : போலீஸ் கலவரம் காரணமாக கிட்டத்தட்ட 600 பேர் கைது. அமெரிக்க இராணுவம் : 32 படையினர் ஜூலை மாதம் போது தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ராணுவத்தினர் தற்கொலை மிகவும் அதிக பராக் ஒபாமாவுக்கு மக்களிடையி ஆதரவு 40 சதவீதத்திற்கும் கீழே குறைந்தது. நியு பசிபிக் தீவு , ஸ்டார் வார்ஸ் என்ற திரைப்படத்தின் கதாபாத்திரங்களின் படங்களை தாங்கிய நாணயங்கள் வெளியிடும் என்று […]

அன்னா ஹசாரே -ஒரு பார்வை

This entry is part 9 of 54 in the series 4 செப்டம்பர் 2011

இந்தியா அதிரத் தான் செய்தது…. ஆனால் நடந்தவை அந்த அதிர்வு பூகம்பம் மாதிரியான எதிர்மறை விளைவுகளை அன்னா ஹசாரேக்கு பின்னிருக்கும் நோக்கம் என்ன என்ற மிகப்பெரிய கேள்விதனை விட்டுச் சென்றுள்ளது… எனது சில எண்ணங்கள் …. சுற்றி இருக்கும் சில துர்சிந்தனையாளர்களால் யுவராஜின் அணுகுமுறைகள் பூமராங் ஆகிவிட, மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க காங்கிரஸ் தடுமாறிக்கொண்டிருந்த நேரம்… அப்போது வந்த விஷயம், அன்னா ஹசாரே… காங்கிரஸ் இலகுவாக கையாண்டிருக்க வேண்டிய விஷயத்தை , காந்தி படப் பிண்ணனியில் நடத்தப்பட்ட […]

குரூரமான சொர்க்கம்

This entry is part 8 of 54 in the series 4 செப்டம்பர் 2011

ஆங்கிலத்தில்:ஜெய் நிம்கர் [மராத்தி மொழி எழுத்தாளர்] தமிழில்: முனைவர் தி.இரா.மீனா வேர்வை கூந்தலின் ஊடே கோடாய் வழிய ,சேலையை இடுப்பில் செருகியபடி நீலம் குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த போது அழைப்பு மணி ஒலித்தது. வசந்த் கதவைத் திறந்து கொண்டு வந்தான். “நீலம் எங்கே இருக்கிறாய்” “ஏன் சஞ்சுவைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறேன்.என்னவாம் ” “முடித்து விட்டாயா? கேட்டவனின் குரலில் அத்தனை பதட்டம் தெரியாவிட்டாலும் ஏதோ சிக்கல் என்று புரிந்தது. “குழந்தைக்கு டிரஸ் போட்டு விடு ” வேலைக்காரப் பெண்ணிடம் […]

ஆயுதங்களும், ஊழலும், மனித உரிமை மீறல்களும்

This entry is part 7 of 54 in the series 4 செப்டம்பர் 2011

Dr. செந்தில் முத்துசாமி உலகெங்கிலும் உள்ள ஊழல்வாதிகளும், உளவு நிறுவனங்களும், ஆயுத உற்பத்தியாளர்கள் மற்றும், சில பத்திரிக்கை தரகர்களும் ஒன்று சேர்ந்துவிட்டதாகவே தெரிகிறது.. இந்த நிலையில், நேர்மையான அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், மத மற்றும் ஆன்மிக தலைவர்கள், மக்கள் நல தொண்டாற்றும் தலைவர்கள், பிரதிநிதிகள் அனைவரும் தீவிரவாதிகளாகவோ, மக்கள் விரோத சக்திகள் எனவோ எளிதில் முத்திரை குத்தபட்டு, எல்லாவித மனித உரிமை மீறல்களுக்கும் எளிதில் உட்படுத்தபடலாம். தீவிரவாதத்திர்க்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில், குறிப்பாக வெளி நாடுகளில் […]

காயகல்பம்

This entry is part 6 of 54 in the series 4 செப்டம்பர் 2011

  அவன் ஒரு இளம் விஞ்ஞானி. இந்தியாவிலிருந்து சென்று அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறான். அவனுக்கு வாழ்க்கையில் ஒரே ஓர் இலட்சியம். குறிப்பிட்ட ஒரு மருந்தைக் கண்டுபிடித்து விட வேண்டும்! அப்படிப்பட்ட அந்த மருந்துதான் என்ன? பழங்காலத்தில் நம் முன்னோர்களிடம் காயகல்பம் என்ற மருந்து இருந்ததாம்! அதைச் சாப்பிட்டால் வயோதிகர்கள் இளைஞர்களாக மாறிவிடுவார்கள்! இத்தகைய அரிய மருந்தைச் செய்யும் முறை இரகசியமாகவே வைக்கப்பட்டு, முன்னோர்கள் மறைந்த போது அதுவும் மறைந்துவிட்டதாம்! அவர்கள் மட்டும் கொஞ்சம் பரந்த மனப்பான்மை […]

‘யாரோ’ ஒருவருக்காக

This entry is part 5 of 54 in the series 4 செப்டம்பர் 2011

சொன்னதையே திரும்பத் திரும்ப பச்சை மரம் சொல்வதாக அலுத்துக்கொண்ட நிழல் கறுப்பு வா¢களில் மொழிபெயர்ந்து கிடக்கிறது காலடியில். அனைத்தும் சொல்லிவிட்டாலும் சும்மாவாய் இருக்கிறது நீலவானம் என முணுமுணுக்கிறது மரம். ஒன்றுபோல்தான் என்றாலும் தானே முளைக்கும் புல்போல் மனம் என்ன நினைக்காமலா இருக்கிறது? சொல்லி அலுத்தாலும் எல்லாம் புதியனவாய் இல்லாவிடினும் பழையனவற்றை எப்படிச் சொன்னால் நல்லது என நானும்…. எப்படி ஏற்பது என ‘யாரோ’வுமாய்…. —ரமணி