வெயிலுக்கு கூட பள்ளிகூடம் பக்கம் ஓதுங்க விஞ்ஞானி தான் கண்டறிந்த அழியா மையினால் புள்ளிகளையும் கோடுகளையும் மாற்றிமாற்றி குறிகளிட்டு துணிகளை அடையாளப்படுத்துகிறார் மாண்டரின் போலிகள் லாஜிக்கில் அடங்காது மொழி வல்லுநரால் வாசிக்க இயலாது கணினி வல்லுநரால் டிகோடிங் செய்ய முடியாது பரம்பரையாக தொடரும் குடும்ப ரகசியம் அவரது கழுதைக்கு தெரிந்தாலும் தெரிந்திருக்கும்
நீள் பயணங்களில் நெரியும் சனத்திரளில் பாரம் தாங்கமுடியாமலோ பத்திரமாய் உறங்கட்டுமெனவோ நம் மடிமீது வலிய இறுத்தப்படும் குழந்தையின் எப்போதாவது இதமாய் உந்தும் பிஞ்சுப்பாதம் இதழ்வழியே தவழ்ந்து ஈரமூட்டும் எச்சிலமுதம் கனவுகளில் தேவதைகள் கூட்டிடும் குறுஞ்சிரிப்பென என்னதான் சொர்க்கத்தை மீட்டினாலும் இறுதியாய் எப்போது சிறுநீர் கழித்திருக்குமென நச்சரிக்கும் சிந்தனை நரகத்திலிருந்து தப்பிக்க முடிவதில்லை பல நேரங்களில்!
எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதில் அப்பாவின் அடையாளம் வந்து தொற்றிக் கொள்கிறது. அவரை நினைவுபடுத்துவது தன்னின் ஒவ்வொரு செயல்களும்தான். அப்பாவைத் தவிர்க்கவே முடிவதில்லை. வாழ்க்கை முழுவதும் அவருடைய நினைவுகளை விட்டுத் தாண்டவே முடியாது என்றுதான் தோன்றியது. கூடவே இருந்து வழி நடத்துகிறார். அதுதான் உண்மை. அத்தனை எளிமையான வாழ்க்கையில் ஒரு மனிதன் தனக்கான அடையாளங்களாய் இவ்வளவையும் விட்டுச் சென்றிருக்க முடியுமா என்பதுதான் ஆச்சரியம். எந்த எதிர்பார்ப்புமற்ற மிக எளிமையான ஒருவனின் வாழ்க்கை தன்னைத்தானே நிலை நிறுத்திக் கொள்கிறது. […]
நம் நாட்டில் வாழும் பல்வேறு உயிரினங்களையும் தொடர்புபடுத்தி சொல்லப்படும் மூட நம்பிக்கைகளை தகர்த்தெறிகிறது இந்த நூல். பறவைகள், விலங்குகள், பூச்சிகள், இரு வாழ்விகள், ஊர்வன, மீன் இனங்கள் பற்றிய பல்வேறு செய்திகளையும் விரிவாக எடுத்துக் கூறுகிறது. இயற்கை மீதும் உயிரினங்கள் மீதும் பற்று கொண்ட ஒவ்வொருவரும் நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம். வன உயிர்கள் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான முறையில் பதில் சொல்லியிருக்கிறார் திரு. முகமது அலி அவர்கள். மூட நம்பிக்கைகளை பற்றி எழுதும் போது […]