வெங்கடேசன் நாராயணஸ்வாமி சொந்தமில்லை பந்தமில்லை. “நான்” விடும் மூச்சுக்காற்றும் “என்” சொந்தமில்லை பந்தமில்லை. சொந்தமில்லை இவ்வுடல், தாய், தகப்பன், பாட்டன், பாட்டி, முப்பாட்டன், முப்பாட்டியிடமிருந்து வந்ததென்பார்கள். அவர்களுடலும் அவர்கள் சொந்தமில்லை. நிரை நிரை செறியுமுடம்பு நோய்படு முதுகாயம். கடைசியில் கட்டையில் போய் வெந்து கருகி நீறாகும் இவ்வுடல். தன்னதாகக்கொண்ட இவ்வுடலை “அது” சூடு செய்கிறது, உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை. “நான்” இல்லா உறக்கத்திலும் “அது” சூடு செய்கிறது. ஆகையால் இந்த “நான்” “அது” அல்ல. எண்ணங்களாவது “என்” […]
கலைவாணன் கணேசன் ஓர் இலக்கிய விமர்சகரிடம் ஒருவர் கேட்டார்: “இக்கவிதையில் அது சரியில்லை! இது சரியில்லை! என்று சொல்கிறாயே, உன்னால் ஒரு கவிதை எழுத முடியுமா ?” அவர் சொன்னார்: “ஒரு நாற்காலி செய்ய ஆர்டர் கொடுத்தேன். தச்சர் செய்து கொண்டு வந்தார். அதை நான் பார்த்து, நாற்காலி சரியாக நிற்கவில்லையே! கால்களை சரியாக அளந்துதான் வைத்தாயா ? என்றவுடன் தச்சர் அதை சரி செய்துதர எடுத்து சென்று விட்டார். தச்சர் “நீயே செய்து கொள்ளவேண்டியதுதானே? என்று […]
ரவி அல்லது. சூழும் கருமேகம் விரைந்தோட வைத்தது யாவையும் அதனதன் காரணங்களுக்கு அச்சம் மேலிட. பொழிந்து விடும் கன மழைக்கான குளிர் காற்றை வெளியிலிருப்பவர்கள் ரசிப்பதாக இல்லை குளிர்மை கூடியிருந்தாலும். வீழ்ந்து கிடக்கும் விவசாயிகள் சாலையோரம் தானியங்களை கூட்டுவதில் மும்முரமாக இருந்தார்கள் ரவறண்ட வாழ்க்கையில் ஈரப்பதமற்று கண்டு முதலாக்கிவிட. இரை எடுத்துச்சென்ற ஏதோவொன்று தவறவிட்ட தட்டைக்கார மீனை சேமிப்பாக்கிக் கொண்டிருந்தது சிற்றெறும்புகள் நிதானமாக. பிய்தெடுத்த சதைகளற்ற முள் கூடு வசீகர அழகு கூட்டியது மழைக் கணத்தை மறக்க […]
நேற்றைய நடைப்பயிற்ச்சியில் காலில் மிதிப்பட்டது, ஆல விதை என எனக்கு தெரியாது. ஏதோ ஒரு சமயம் அவ்வழி நடந்தேன். வா! என அழைத்து விருட்சமாக, மனதார வாழ்த்தியது வீசும் தென்றலாய். ஜெயானந்தன்
குரு அரவிந்தன் மகாஜனக் கல்லூரி முன்நாள் அதிபர் அமரர் பொ. கனகசபாபதி அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்த 10 வது ஆண்டு நினைவுநாள் கனடாவில் ரொறன்ரோவில் உள்ள மல்வேன் பூங்காவில் 4-9- 2024 அன்று நினைவு கூரப்பட்டது. பொதுவாக ஒருவர் மறைந்த தினம் என்றால் அது ஒரு சோகசம்பவமாக இருக்கும். அதைத் தவிர்ப்பதற்காகத்தான், அவர் புகுந்த மண்ணில் தமிழ் இனத்திற்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி அதிபரின் பிறந்த தினத்திலன்று ஒவ்வொரு வருடமும் இங்குள்ள நண்பர்கள், பழைய மாணவர்கள், மற்றும் குடும்பத்தினரால் […]
ரவி அல்லது கைகளசைத்தஇடப்பக்கம் நின்றுருந்தஇரு சிறுவர்களின்கையிலிருந்ததுஇனிப்பாக இருக்குமெனநினைத்தேன்.வேகமாகவாகனத்தில்வந்தபொழுதுஅவதானிக்க தவறியதால். கூப்பிடு தூரத்தைகடந்துவிட்ட போதும்திரும்ப நினைத்ததுபிறந்த நாளுக்குஇனிப்பு கொடுக்கநினைத்திருக்கும்.அவர்களின் அறச் சிந்தனையைஉதாசீனம் செய்யலாகாது.ஆட்களைப் பார்த்துவருவது இல்லைஅறமென்பதனால். முன்பொரு முறைசுட்டெரிக்கும் வெயிலின்மதியப்பொழுதில்கல்லூரி மாணவர்கள்கரும்பு பானம்வாங்கிக் கொடுத்தார்கள்தாகத்தணிதலாககடந்து செல்கிறவர்களுக்கு.பிறந்த நாளுக்கென்றுசொன்னாலும்கைபேசியின்விருப்பு எண்ணிக்கை கூடலின்ஆசையென்பதைமறுக்கவியலாதுநற்பயனாகவந்தவர்களின்உள்ளம் குளிர்ந்தாலும். திரும்பிச் சென்றபிறகுதான்தெரிந்தது.வீதியோரவழிபாட்டு பாடல்களால்விளைந்ததுஇச் சிறுவர்களின்மகிழ்ச்சி பொழுதுகளென்பதுநம்பிக்கையைபாலத்தின் திண்டில் வைத்துபூக்கள் தூவி இருந்ததால். மீச்சிறுநிகழ்வு கூடஆழப் புரிதலுக்குள்தள்ளுகிறது.புறங்களை மறக்கவைக்கும் படியாக.வீதியோரங்களில்விண்ணதிரபாடல்கள் ஒலித்தாலும்சிந்தயைச்சிதைக்காத பயணமாகவாய்க்கிறது. இப்போதெல்லாம்யாவரின்மீதான கரிசனமாக. பிறகொரு நாள்வரும்பிறந்த நாளில்பிரித்து எடுத்துக்கொள்ளுங்களெனஐம்பது ரூபாய் கொடுத்தேன்ஆதுரச் சிரிப்பில்.‘டேய்…ஆளுக்கு இருபத்தஞ்சிடா’ […]