அகன்ற இடைவெளி !

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

அவள் மிக அழகான பெண்
அவன் மிக அழகான ஆண்
இருவருக்கும் திருமணம் முடிந்தது

நாட்கள் செல்லச் செல்ல
ஒருவரின் கரும் பகுதியை
மற்றொருவர் புரிந்துகொண்டனர்

அவள் சுதந்திரம் கண்டு
அவன் கோபப்பட்டான்
அவன் அறியாமை கண்டு
அவள் எரிச்சல் அடைந்தாள்

வாழ்க்கை
இடைவெளியின் பரப்பளவு
அசாதாரண நீள அகலங்களால்
மௌனத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறது!

மனம் ஒன்றுபடாமல்
அவர்களின் அழகு வெளியே
பரிதாபமாக நின்றுகொண்டிருக்கிறது

வாழ்க்கை விசித்திரங்களில்
நாம் ஓரிடத்தில் நிற்கிறோம்
அந்த இடம் அவ்வப்போது
வெப்பமாகிக்கொண்டே இருக்கிறது !

Series Navigationபாவண்ணனின் கவிதைகளில் ஒரு பயணம்.மாலே மணிவண்ணா