Articles Posted by the Author:

 • மரங்கள்

  மரங்கள்

        ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   இரவு பகல் பாராமல் நின்று கொண்டிருக்கும் உங்களுக்குக் கால் வலி வேரில் தெரியும்தானே    உங்கள் இலைக் குழந்தைகளின் எண்ணிக்கையை எப்போது உணரப் போகிறீர்கள்   மனிதர்களுக்கு உங்கள் மௌனமொழி விளக்கம் என்ன ?   எங்களுக்கு நிழல் தரும் பெருமையை நினைத்துப் பார்ப்பதுண்டா ?    ஆக்சிஜன் தருவதற்கு வசூல் ஏதும் செய்யாத அதிசய   மருத்துவர்கள் நீங்கள்   உங்களுக்குத் தண்ணீர் தேவைப்படும் தருணத்தில் கூட மௌனம் […]


 • தாவி விழும் மனம் !

  தாவி விழும் மனம் !

          ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   கிடைத்தவற்றின் பட்டியல் சிறியதாகவும் கிடைக்காதவற்றின் பட்டியல் பெரியதாகவும் அருகருகே நின்று அவனைப் பாடாய்ப் படுத்துகிறது   பெரிய பட்டியலின் வரிகளில் அடிக்கடி அவன் மனம் தாவித்தாவி விழுகிறது   அதில் புரண்டு புரண்டு கடைசியில்.  சலித்துப் பெருமூச்சில் கரைகிறது   சிறு பட்டியல் அடிக்கடி ஏங்குகிறது தாவும் மனத்தைச் சபித்தபடி …   நிகழ்காலப்புள்ளி.  புறக்கணிக்கப்படுகிறது    விதி எழுதிய முதல் பட்டியலைவிட மனம் எழுதிய  இரண்டாம் […]


 •  பொக்கிஷம் !

   பொக்கிஷம் !

        ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   அப்பாவின் முதுமையின் கடைசி நாட்களில் கைவிரல்கள் பழைய மாதிரி கையெழுத்திட முடியவில்லை   இன்னும்  நாட்கள் சென்றால் அஞ்சலகக் கணக்கிலுள்ள இருநூறு ரூபா இல்லை என்றாகிவிடும்   அப்பாவின் கணக்கை மூடியதில் அச்சிறு தொகை இப்போது என் கையில் …   தொகை சிறியது என்னும் வருத்தம்  கொஞ்சம்கூட எனக்கில்லை   என் சேமிப்பில் இணைந்துவிட்ட அத்தொகை என் பொக்கிஷம் இன்றும் என்றும் …       […]


 • மலர் தூவிய பாதையில் …

  ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அந்த வெற்றிடத்தை அவள் ஆக்கிரமிப்பாளென அவன் நினைக்கவில்லை   காதல் இருகரங்களையும் நீட்டி அழைத்த போது அவன் இறுக்கமான மௌனத்தை  அவள் பின்னர் பாராட்டினாள்    அவள் பேச்சில் பொய்கள் உண்மை போல்  அலங்கரித்துக் கொண்டு புன்னகைக்கும்   அவள் பொய்மைக்கு  அவன் உண்மையின் மரியாதையையே கொடுத்தான்   காதலின் முடிவுரையை ஒரு நாள் எழுதப்போகும் காலத்தின் மனம் அறியாமல் மலர் தூவிய பாதையில் இவர்கள் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள் !   


 • அக்னிப்பிரவேசம் !

  ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   உடல் முழுவதும் சிறு சிறு கொம்புகள் முளைத்த பந்து வடிவக் கருமி ஆங்காங்கே மனிதர்களைச் சமைத்துக் கொண்டிருக்கிறது   குரல்வளையில் குடியேறி உடல் நீரைச்சளியாக்கி உயிர் குடித்து விலகுகின்றது உயிர்க்கொல்லி   கடும் பசியோடு ஆயிரமாயிரம்  ஆரஞ்சு நிற சாவுகள் தொங்கத் தொங்க காத்திருக்கிறது தீ   மனிதர்கள் இறுதி மரியாதையைக் கூடப் பெற முடியாமல் தீக்குகையில் நுழைகிறார்கள் !‌                   […]


 • நூல் அறிமுகம்-பா.சேதுமாதவனின் “சிறகிருந்த காலம்”

  நூல் அறிமுகம்-பா.சேதுமாதவனின் “சிறகிருந்த காலம்”

              ஸ்ரீரங்கம் சௌரிராஜன்        பா.சேதுமாதவன் கவிதை, சிறுகதை, வரலாறு, கட்டுரைகள் எனப் பல தளங்களில் பங்களிப்பு செய்து கொண்டிருப்பவர்.சிறகிருந்த காலம் இவரது பத்தாவது நூலாகும். இதிலுள்ள அறுபது கட்டுரைகள் எல்லாமே வாழ்க்கை வரலாற்றுச்சாயல் கொண்டவை. அணிந்துரை தந்த ஆர்.ரமணியின் சொற்களில் சொல்ல வேண்டுமானால்,   “கால் நனைக்கும் நேற்றைய நதி” என்றுதான் சொல்லவேண்டும்.        முதல் கட்டுரை பிள்ளைப்பருவத்து சைக்கிள் பழகிய அனுபவத்தை அனாயாசமாகப் பதிவு செய்துள்ளது. சரியான சில […]


 • கனவில் வருகிறது !

  ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   மீண்டும் மீண்டும் கொட்டிக் கொட்டி அளந்ததில் துயரங்களின் கொள்ளளவு கூடித்தான் இருக்கிறது   எல்லா நிஜங்களும் தம் நிழல்களை என்னிடம் தந்துவிட்டுப் போனது எப்படி ?    கண்முன் தெரியும் பசுமைக் கணநேரத்தில் நிறம் மாறிப் போகிறது   என்முன்  அணிவகுத்து நிற்கும் கேள்விகள் ஏதோ ஒரு பதிலை என்னிடம் யாசிக்கின்றன   மௌனத்தைப் பதிலாக்கியதில் காலத்தின் இரைச்சல் கூடிக்கொண்டே போகிறது   மணற்பிரதேசம் மறைந்து நீர் சுழித்தோடும்  ஆறொன்று அடிக்கடி என் […]


 • அந்தப் பார்வையின் அர்த்தம் !

  அந்தப் பார்வையின் அர்த்தம் !

  ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   நடைப்பயிற்சியின் போது அவன் இடது கையில் இருந்த அரைக்கீரை கட்டைப் பார்த்தது அந்தக் கருப்பு வெள்ளை ஆடு   அதன் பக்கத்தில் நின்று கொண்டிருந்தது கருப்பு வெள்ளைக்குட்டி   அம்மா ஆட்டின் கண்களில் யாசித்தல் ததும்பி நின்றது   ஒரு கணம் யோசித்த அவன் நொடிப் பொழுதில் கீரைக்கட்டின் நாரை  அவிழ்த்து உதற அவை தின்னத் தொடங்கின   அவன் நாளை கீரை உண்டால் என்ன ?          […]


 • கதவு திறந்திருந்தும் …

  கதவு திறந்திருந்தும் …

      ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   கதவு திறந்திருந்தும் அவன் இன்னும் உள்ளே போகவில்லை   பயணிக்கிறோம் என்ற நம்பிக்கையில் அவன் அதே புள்ளியில் நிற்கிறான்   இலக்கிய தாகத்தில் அவன் சில வடிவங்களில் தன்னை நிரப்பிப் பார்த்தான் எங்கும் நிலைக்க முடியவில்லை   அவன் மனத்தில்  சில எழுத்துகள் இருக்கின்றன அவை சொற்களாவதில்லை    சில சொற்கள் இருக்கின்றன அவை வாக்கியங்களாவதில்லை   சில வாக்கியங்கள் இருந்தும் அவை கவிதையாவதில்லை   அவன் கோப்பையில் நிரம்பி […]


 • மாயவரம் பாட்டி

  மாயவரம் பாட்டி

                          ஸ்ரீரங்கம் சௌரிராஜன்    அந்தப் பாட்டியின் மனக்காயங்கள் இப்போது ரணமாகிவிட்டன   புலம்பல்களில்  தத்தளித்துக் கொண்டிருக்க ஆறுதல் திசை தேடி அலைகிறது   ” ரெண்டு காலும் போச்சு … ரெண்டு கையும் போச்சு … ரெண்டு கண்ணும் போச்சு … ”  என்ற ஆதங்கம் பேரன் ரவி திலகனுக்கு பெரிய காமெடி ஆகிவிட்டது   பாட்டியைப் போல் பேசி […]