அகமுகம்

Spread the love

 

குமரி எஸ். நீலகண்டன்

 

அகமாய் முகம்

பார்க்க முயன்றேன்..

முகம் திரும்பவில்லை..

சிரத்தையுடன்

முகத்தினை திருப்பிய போதும்

முகம் தெரியவில்லை..

உள்ளே இருளாக

இருந்திருக்கலாம்…

கொஞ்சம்

ஒளி வந்த போதும்

முகம் முகமாக இல்லை..

அகவிழிகளின் மேல்

அழுக்குப் படலம்

படர்ந்திருக்கலாம்…

அந்தப் படலத்தை

கிழித்தெறிந்த போதும்

முகம் சரியாகத்

தெரியவில்லை.

ஒருவேளை மூளை

முகத்தின் முகத்தை

மறைத்திருக்கலாம்…

ஆனாலும் அகமாய்

முகம் பார்க்க

ஆழமாய் பயிற்சித்துக்

கொண்டிருக்கிறேன்.

 

குமரி எஸ். நீலகண்டன்

Series Navigationமெல்ல மெல்ல…விவேகானந்தர் 150 -ஆம் ஆண்டுப் பிறந்த நாள் விழாவும் பேராசிரியர் பெஞ்சமின் லெபோவுக்குப் பாராட்டு விழாவும்.