Articles Posted by the Author:

 • நிழல் பற்றிய சில குறிப்புகள்

  நிழல் பற்றிய சில குறிப்புகள்

        குமரி எஸ். நீலகண்டன்   நிழல்களின் யுத்தம் நேரிட்டப் பாதையில்… எங்கோ புயலின் மையம்…   இருட்டில் நிழல்கள் ஒன்றிணைந்தன. வெளிச்சங்கள் கொஞ்சம் விழித்த போது விழுந்த இடமெல்லாம் நிழல்களால் நீடித்தது நித்தமும் போர்.   பணிவாய் நடக்கிற போது முந்துவதும் நிமிர்ந்து ஒளிப்பந்தை வீரமாய் பார்த்தால் பின்னால் பதுங்குவதும் நிழலின் இயல்பு.   நிழல்கள் விழுந்தும் காயப்படுவதில்லை. மிதி பட்டும் வலிப்பதில்லை.   punarthan@gmail.com  


 • சிவகுமார் என்ற ஓவியத்திற்கு வயது 80

                                               குமரி எஸ். நீலகண்டன்                                                                 சிவகுமார் ஒரு பிறவிக் கலைஞர். கலைஞர்கள் எப்போதுமே படைக்கப் படுகிறார்கள். அவர்களின் சூழலையும் அதனுள் இயங்குகிற அவர்களின் சுய உந்துதலையும் பொறுத்து கலைஞன் மாபெரும் கலைஞனாக உருவெடுக்கிறான். பழனிமலை உச்சியில் ஒலித்த அப்பாவின் உரத்த திருப்புகழும் அம்மாவின் உறுதியான கடுமையான உழைப்பும் காசி கவுண்டன்புதூரில் ஒரு கலைஞனை விளைவித்தது.  பருத்திக் காட்டில் அவள் பாசனம் செய்த வியர்வையும் அந்த வளமான மண்ணின் ஈரமும் வாசமும்தான் […]


 • நடிகர் சிவகுமாரின் கொங்கு தேன் – ஒரு பார்வை

    குமரி எஸ். நீலகண்டன்   சிவகுமாரின் கொங்குதேன் நூல் கொங்கு மண்ணின் வரலாற்றை வாசத்துடன் பதிவு செய்திருக்கும் ஒரு உன்னதமான நூல். கிராவின் எழுத்துக்கள் போல் உயிர்ப்புடன் அந்த கிராமத்தை நம்மோடு ஈர்த்து வைக்கிறது சிவகுமாரின் எழுத்து. இந்து தமிழ் திசை இணையதளத்தில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கொங்கு தேன் நூலில் பிளேக் பற்றிய செய்தியைப் படிக்கும் போது இன்றைய கொரோனாதான் நம் மனதில் நினைவுகளை விரிக்கிறது. அன்றைய பிளேக் சிவகுமாரின் 12 […]


 • ப. திருமலையின் கொரோனா உலகம் – ஒரு பார்வை

  குமரி எஸ். நீலகண்டன் நான் பலதடவை ஒரு வித்தியாசமான வகையில் பெருமைப்படுவது உண்டு. காந்தி என்ற பெயரை உலகின் ஏதாவது ஒரு மூலையில் யாராவது ஒருவர் இந்த நொடியில் நிச்சயமாக சொல்லிக் கொண்டுதான் இருப்பார். பாரதியார், வள்ளுவர், கம்பரென தமிழுக்கு பெருமை சேர்க்கிற உலகம் வியக்கும் ஆளுமைகளையும் உலகில் ஏதாவது ஒரு மூலையில் யாராவது ஒருவராவது இந்த நொடியில் பேசிக் கொண்டோ எழுதிக் கொண்டோ இருப்பர். காற்று போல உலகில் பரவி புகழுடன் வியாபித்து நிற்பவர்கள் இந்த […]


 • காந்தியின் கடைசி நிழல்

      மலையாளத்தில் மூலம் – எம்.என். காரசேரி, தமிழில் – குமரி எஸ். நீலகண்டன் எம்.என். காரசேரி மலையாளத்தில் மிகவும் அறியப்பட்ட முக்கியமான எழுத்தாளர். அவர் சமீபத்தில் மறைந்த காந்தியின் தனிச் செயலாளர் கல்யாணம் அவர்களோடு மிகுந்த நட்பும் அன்பும் கொண்டிருந்தார். அவர் மலையாளத்தில் எழுதிய அஞ்சலிக் கட்டுரையின் தமிழ் வடிவம் இது. ”சுடப்பட்டு ரத்தம் சிந்த காந்திஜி பின்னோக்கி விழுந்தார். அவரது கண்ணாடியும் காலணிகளும் தூக்கி எறியப்பட்டன. எதுவும் பேச இயலாமல் திகைப்பில் நின்றேன் […]


 • அபிநயா ஸ்ரீகாந்தின் ஏழு ராஜாக்களின் தேசம் – நூல் விமர்சனம்

        இந்த உலகில் பசுமையானவையும் குளிர்ச்சியானவையும் மட்டுமே நம் மனதில் பேரளவில் தாக்கத்தையும் ஒரு நெருக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளன. ஆனால் எதார்த்தத்தில் பூமியில் வளமற்றவையென்று எண்ண எதுவுமே இல்லையென உணர வைப்பதுதான் அபிநயா ஸ்ரீகாந்தின் ஏழு ராஜாக்களின் தேசம் என்ற நூல். பணம் சம்பாதிக்க மட்டுமே துபாய்க்கு செல்வார்களென அறிந்திருக்கிறோம். துபாய்க்கு எத்தனை பெயர்கள் வழக்கில் இருக்கின்றன, எந்தக் காரணங்களால் அந்தப் பெயர்கள் வந்தன போன்ற வேர்ச்சொல் விபரங்களுடன் வரலாறு, சமூகம், பொருளாதாரமென பல […]


 • சத்திய சோதனை

  சத்திய சோதனை

  உண்மை சுடும். உண்மை சுடப் படலாம். வலி நாட்டிற்கு… தன்னைச் சுடும் உண்மை தங்கமாக மாறும் யாரையும் சுடாத உண்மையின் பெயர்தான் அன்பு.


 • நினைவின் ஆழியில் அலையும் கயல்கள் – ரவிசுப்பிரமணியனின் சமீபத்திய கவிதை நூல் விமர்சனம்

  குமரி எஸ். நீலகண்டன் நினைவின் ஆழியில் அலையும் கயல்கள் என்பது ரவிசுப்பிரமணியனின் சமீபத்திய கவிதை நூல். ஆழிக்கடலின் சூறாவளியாய் வந்தவை இந்த அழகியக் கவிதைகள். ரவிசுப்பிரமணியன் அவர்கள் இசையிலும் கவிதையிலும் ஆழ்ந்த அறிவும் நுடபமும் அறிந்தவர். அமைதியாய் உலவுகிற இந்த அற்புத மனிதரிடம் வலை வீசாமலேயே அகப்பட்டு விடுகின்றன அபூர்வமானபடிமங்களோடு பலதரமான அழகியல் அனுபவங்கள் கவிதைகளாய். இவர் கவிதைகளை படைப்பதாய் நான் பார்க்கவில்லை. கவிதைகள் இவரின் வளமான ஈரமான இதயத்தில் முளைத்து வளர்ந்து பரந்து படர்கின்றன. அவரின் […]


 • சாலைத்தெரு நாயகன்

  குமரி எஸ். நீலகண்டன் திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவிலின் எதிரே ஒரு சிறிய பூங்காவினை அடுத்து ஒரு நெடிய சாலை. அதுதான் சாலைக் கம்போளத் தெரு . அந்தத் தெருவின் தொடர்ந்த பாதை கிள்ளிப் பாலம் தாண்டி வளைந்து நெளிந்து கன்னியாகுமரி நோக்கிச் செல்கிறது. உள்ளே நுழைந்ததுமே சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் நுழைந்த உணர்வு இருக்கும். மளிகைக் கடைகள் சார்ந்த வணிகப் பகுதியில் வரும்போது நாகர்கோவில் கோட்டாறு கம்போளத்தெருவுக்குள் நுழைந்த உணர்வும் ஏற்படும்.  மலையாளத் தமிழர்கள் ஆ.மாதவனின் […]


 • 2021

  2021

  அண்டவெளியில் ஒரு உயிர் கோளமாய் சுழலும் பந்தில் சூரிய விழிகளின் சிமிட்டலாய் கருப்பு வெள்ளை ஒளி ஜாலம் ஒரே தாளத்துடன் ஒரே வேகத்துடன் காலச் சக்கரமாய் உருண்டு கொண்டு இருக்கிறது. வருடங்கள் வந்தும் போயும் இருக்கின்றன பூக்கடை முன்பு பறக்கிற அழுக்கு தூசிகள் போல வாழ்த்துக்களோடும் ஏச்சு பேச்சுக்களோடும். வருடங்கள் பிறந்து கொண்டே இருக்கின்றன வேறு வேறு வடிவங்களில் கொரோனா போல. பலரும் முகமூடிகளோடே திரிகிறார்கள். பலர் தற்காப்புக்காக முக மூடி போட்டுக் கொள்கிறார்கள். முகமூடிக்குள் பலருக்குள்ளும் […]