அகம் புறம்

Spread the love

 

 

அகம் புறம்

 

படுக்கை தட்டவில்லை

பாத்திரம் கழுவவில்லை

கூடம் பெருக்கவில்லை

குப்பை அகற்றவில்லை

துணிஈரம் உலர்த்தவில்லை

உண்ட ரொட்டி மூடவில்லை

அம்மையாருக்கு அவசர வேலை

 

தூய்மைநாள் விழாவுக்கு

அமையார் தலைமையாம்

மகளிர் மன்றத்துக்கும்

அவரே  தலைவியாம்

 

அன்று

ஊடகங்கள் சூழ

இதோ!

ஊர்த்தெரு கூட்டுகிறார்

 

கூட்டிமுடித்து

கூட்டத்தில் பேசினார்

 

‘வீடு தூய்மையானால்

வீதி தூய்மையாகும்

வீதிகள் தூய்மையானால்

ஊர்கள் தூய்மையாகும்

ஊர்கள் தூய்மையானால்

உலகமே தூய்மையாகும்

வீட்டுத்தூய்மையே

தாய்மை உண்மை

 

பேச்சின் இடையே

அம்மையாருக்கு

ஆறு வயது மகளின்

தொலைபேசி அழைப்பு

 

‘அம்மா

ரொட்டில கரப்பான்’

 

அமீதாம்மாள்

Series Navigationசொப்கா பீல் குடும்பமன்றம் ஒன்றுகூடல் – 2022இது போதும்..