அந்த வீட்டின் பெயரே கோழிக்குஞ்சு வீடுதான் வீடு நிறைய கோழிகள் பஞ்சுக்குஞ்சுகள் பின்தொடர இதோ சாம்பல்நிறக் கோழி எல்லாக் கோழிக்குமே தாய்க்கோழி சாம்பல்தான் குஞ்சுக் காலங்களில் சாம்பலின் முதுகு பல்லக்கு றெக்கைகள் குடைகள் மிதிகள் ஒத்தடங்கள் குஞ்சுகளுக்காகவே குப்பை கிளறும் சாம்பல் பொறுக்கும் குஞ்சுகள் பொறுமை காத்து பொறுக்கும் சாம்பல் சோளம் சோறு பயறு பருப்பு கறி மீன் கழிவு சோற்றுக்கஞ்சித் தவிடு பிள்ளைகள் முடித்ததும் இருந்தால் […]
(ஒரு கதை கவிதையாக) மகன், மருமகள் பேரன் பேத்தியுடன் அம்மா ‘பிள்ளைகளுக்காக அம்மா தொல்லையின்றி நாம்’ என்பது மகனின் கொள்கை பணிப்பெண்ணாய் அம்மா எப்போதும் அடுக்களையில் அனைவரும் தனி அறையில் ஒரு நாள் அம்மாவுக்கு சளி, இருமல் உறுதியானது கொவிட் அடுக்களையில் அம்மா ஏழுநாள் தனிவாசம் ஏழாம் நாள் தந்தையர் தினம் அம்மாவின் அப்பா அடிக்கடி சொல்வார் மாமனாரும் கணவரும் கூட […]
மனிதன் பூமிக்கு வருமுன் பூமியில் பூத்தது முதல் பூ அழகும் மணமும் அதிசயமானது அன்று பறவைகள் பூச்சிபோல் நகர்ந்தன பூவைக் கண்டதில் சிறகு பெற்றன பூச்சிகள் மதுவில் சொர்க்கம் கண்டன பிறகுதான் வந்தான் மனிதன் இன்று கற்காலம் கணினிக்காலமானது மனிதன் சொன்னான் ‘மண்ணுலகம் படைக்கப்பட்டது மனிதனுக்காகவே’ பொய். ஒரே நாள் வாழ்ந்து உயிர்விதை செய்யும் பூ தாவரங்களின் தாய் பூ இறைவனின் தாய்மொழி பூ நட்சத்திர பிம்பங்கள் பூ மனிதனின் குரு […]
என்னைச் சுமந்தபடி அம்மா சூட்டில் நடந்தது அம்மாவும் நானும் காய்ந்த நெல்லைக் கோணியில் சேர்த்தது மதியம் அத்தா சாப்பிட நான் விசிறிவிசிறி நின்றது அம்மை ஊசிக்கு ஓடி ஒளிந்தது பனந்தோப்பில் காணல்நீர் கண்டது அங்கு நுங்கு குடித்தது கரிக்கண்ணாடியில் கிரகணம் பார்த்தது காயும் கறிக்கு காவல் இருந்தது கொலுசுவீட்டுச் சுவரேறி கொய்யா பறித்தது நவ்வாப்பழக்காரி பொன்வண்டு தந்தது அது முட்டையிட்டது பசு […]
சாவிகளெல்லாம் வைத்துப் பூட்டிய சாவி தொலைந்துவிட்டது நான் சொல்வதை மின்தூக்கி மட்டுமே கேட்கிறது ‘தாய்க்குப் பின் தாரம்’ ஆண்களுக்கு சரி பெண்களுக்கு? மரம் மண்ணுக்கு சம்பளம் தரவே இலையுதிர் பருவத்தில் பச்சத்தண்ணியானால் பத்திரமாய் இருக்கலாம கொதித்தால் தொலைவாய் தொட்டிச் செடிக்கு தொட்டிதான் பூமி அழகாய் அமையாது வாழ்க்கை அமைவதை அழகாக்குவதே வாழ்க்கை மாத்திரை மருந்துகள் துளித்துளியாய்க் கொல்லும் ரத்தம் இப்போது சந்தையில் கிடைக்கிறது முளைக்கும்வரைதான் […]
அன்னையர் தினக் கவிதை கனவு வண்ணங்களை கண்ணீரில் குலைத்து கருப்பையில் என்னை எழுதினாய் என் சுருதிக்கு நரம்புகளை மீட்டி இசை கூட்டினாய் உன் சொற்களால் என்னைப் பேசவைத்தாய் துளி எனைத் தந்த நதியே ‘என்னப்பெத்த ராசா’ என்று என்னை நதியாக்கி நீ துளியானதில் தியாகம் அர்த்தம் பெற்றது தூளியின் தூக்கத்தில் கைபிசைந்த அமுதில் பொய்யாகிப் போயின என் எல்லா சுகங்களும் என் தாகங்கள் என் பசிகள் […]
மூத்த குடிமகன் நான் முக்கால் நூறு என் வயது ஆமையாய் நகர்ந்தே முயல்களை வென்றேன் வாடிவாடி வதங்கி மறுமழையில் துளிர்த்தேன் என் வேர்களை இங்கு எவரும் அறியார் தேரை என்னைத் தேவன் மறந்ததில்லை சிற்பமும் தெரியும் சிலந்திவலை நுட்பமும் புரியும் கானல் நீரும் தெரியும் கார்மேகமும் புரியும் மின்மினி நான் ஒளிக்க ஒன்றுமில்லை பால் வடிக்கும் கள்ளிகள் பசுவல்ல அறிந்தேன் […]
தீ விழியை சாம்பல் இமைகள் தழுவிவிட்டன தொடர்பற்ற தொலைக்காட்சித் திரையின் புள்ளிக்கூட்ட நினைவுகள் ஓய்ந்துவிட்டன கனவுப்புகை உருவங்கள் எழுந்தன விழுந்தன நாட்காட்டி ஆயுளை வாழ்க்கை கிழிப்பது கொஞ்சம் தூக்கம் கிழிப்பது மிச்சம் தோற்றது தொலைத்தது துடித்தது என காயம்பட்ட இதயத்தை ஆறப்போடும் தூக்கம் ஆதாம் முதல் அனைவருக்கும் தூக்கம் பொது தூக்கத்திற்கில்லை ‘நான்,நீ’ வாழ்க்கைத் தேர்வை தூங்கி எழுந்து எழுதினான் வென்றான் எழுதும்போது […]
பசியாற இட்லி,தோசை? சட்னிக்கு ஒன்றும் இல்லை உப்புமா, பொங்கல்? ரவா நெய் இல்லை வரகுக்கூழ்? வரகு இல்லை மேகி மீ நூடுல்ஸ்? வாங்கவேண்டும் ஓட்ஸ்? வாங்கவேண்டும் ரொட்டி? காலாவதி பழையது? தயிர் இல்லை ஆச்சி கடை இட்லி? இப்போது 8, திறப்பது 9 தேக்கா சந்தையில் தேவைகள் வாங்கினால் உண்டு இப்போதே 8. கூட்டம் 8.30 தாமதமாகுமே பேச்சாளனே நான்தான் […]
பத்துக்குப்பத்து பேத்தியாக… மகளாக… தாயாக… இன்று பாட்டியாக… என் நான்கு தலைமுறைத் தீபாவளிகள் அன்று பேத்தியாக நான் என் கிராமத்தில் … ஒரு தீபாவளியில் என் பாட்டி…. மண்டிக்குளக் கரைகளில் மண்டிய மருதாணி பறித்து அம்மியில் அரைத்து நான் தூங்கையில் பூசுவாள் மறுதாள்…. கைச்சிவப்புக் காட்டி கன்னம் பதிப்பாள் சேக்ராவுத்தர் குளத்தில் செக்கெண்ணை தேய்த்து குளிப்பாட்டுவாள் தையல்காரனைத் துரத்தித் துரத்தித் தைக்கவைத்த பாவாடை சட்டையை அணிவித்து […]
பின்னூட்டங்கள்