அகலிகைக் கல்

Spread the love

 

மஞ்சுளா 

நீ சொல்ல விரும்பிய 

ஏதோ ஒன்றை 

என் செவிகள் 

புரிந்து கொண்டன 

ஆனாலும் 

உன் விழிகளில் 

ஏதோ ஒரு ஏமாற்றம் 

உன் உதடுகள் 

முணு முணுக்கிறது 

என் இதயம் திறக்க 

எந்தச் சொல்லை 

தேடி எடுப்பது என்று? 

இனிக்கும் சொற்களை 

ஈக்கள் மொய்த்து தின்று விட்டன 

காலத்தின் இடுக்குகளிலிருந்து 

கவனமாக குறி கேட்டு திரும்புகிறேன் 

காற்றோ வெவ்வேறு திசைகளிலிருந்து 

வெவ்வேறு சொற்களை 

சுமந்து வருகிறது 

ஆணின் எந்தச் சொல்லும் பெண்ணில் 

ஒரு கல்லாகி கிடக்கிறது 

அகலிகையின் 

சாபம் அறியாயோ நீ? 

          +++++             -மஞ்சுளா 

 

Series Navigationஅமெரிக்க எண்கணிதம் – ஆங்கில மூலம் : நதாலி டயஸ்