அங்கதம்சத்யானந்தன்

இணையம் எப்போதும் 
விழித்திருக்கிறது

வெளி உலகு நிழலுலகு
இரண்டையும் விழுங்கி
செரிக்க முடியாது விழித்திருக்கிறது

மென்பொருளை மென்பொருள்
காலாவதியாக்கியது

காகிதம் ஆயுதம் இரண்டாலுமே
ஆயுதம் பலமில்லை
என்று நிலைநாட்ட முடியவில்லை

மின்னஞ்சல் முக நூல் முகவரி
ஒளித்த விற்ற விவ்ரம்
புதிர் 

விரியும் வலையில்
அரங்க அந்தரங்க
இடைத் திரை
ஊடகமாய்

கனவில் நான் 
திறந்து வைத்து விட்ட
இனிப்புகள் மீது 
ஈ மொய்க்க வாய்ப்பில்லை
நான் அதை விற்க இயலும்

விற்பனைக்கானவையும்
விற்பவனும்
சிலிக்கான் சந்தையின்
எண்வழி இரவு பகல்களில்

இரவில் நெடுஞ்சாலையில்
மின் வட்டு ஒன்று
எதிரொளித்தது ஒரு
சைக்கிளின் கைப்பிடியில்
அங்கதமாய்

Series Navigation