அசாரேயின் துவக்கமும் – கொள்ளையர்களின் பதட்டமும்.

 

அசாரே என்ற இயக்கத்தின் ஊற்றுக்கண்ணாக இருப்பது லட்சக்கணக்கான மத்யத்தர வர்க்கத்தின் அரசியல்வாதிகளின் மீதான கோபமும், வேதனையும், கீழ்த்தட்டு மக்களின் கடுமையான அரசு ஊழியர்களின் மீதான கோபமும்தான் , இந்த இயக்கத்தின் வெற்றியின் சின்னமாக தெரிகின்றது.

காந்தியின் சிந்தனையும், ஜெயப்பிரகாஷ் நாரயண் போராட்டமும் வெவ்வேறு இலக்கைநோக்கி சென்றது. இன்றைய தேவை, நாணயமான, ஒழுக்கமுள்ள, சமூக சிந்தனைகூடிய தலைமை பொறுப்பை ஏற்று, மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடக்கூடிய மனிதர்களும். அதனால் ஏற்படும் சட்டமன்றங்களும், நாடாளு மன்றங்களும் துவங்கவேண்டும்.

இன்றைய மந்திரிகள், எம் ல் ஏக்கள் அனைவருக்கும், நம்முடைய வரிப்பணத்திலிருந்து, மிகையான சம்பளம், இதர அனைத்து வசதிகளும் கிடைத்து வருகின்றது. அதற்கான பணிகளை செய்யாமல், கோடிக்கணக்கான பணத்தை கொள்ளை அடிக்க திட்டமிடுதல்,சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவது, நாட்டை முன்னேற்ற பாதைக்கு விடாமல் தடை செய்வது இன்றைய அரசியல் வாதிகளின் செயலாக தெரிகின்றது.

ஆனால், சுதந்திரமடைந்து 65 ஆண்டுகள் இறுதியில், நாம் கண்டது ஊழ்ல் நிறைந்த , சமூக உணர்வற்ற , மதவாதிய, ஒழுக்கமற்ற மனிதர்களே நமது சட்ட மன்றன்ங்கள், நாடாளூ மன்றங்களில் நிரம்பி உள்ளனர். வெளியே சென்ற வெள்ளையன் நம்மை பார்த்து சிரிக்கின்றான்,இந்தியர்கள் அழுக்கு படிந்த ஆதிவாசிகள், நாட்டை ஆளா தகுதியற்றவர்கள் என்று கேலி செய்கின்றான்.
மதங்களையும், சாதிகளையும் பிடித்துக் கொண்டு தொங்குகின்ற வவ்வால்கள் என்று ஏளனம் பேசுகின்றான்.

இது நமக்கு தேவையா ? உலகமே வியக்கின்ற அளவிற்கு வேதங்கள்,இதிகாசங்கள், புராண்ங்கள், இலக்கியங்கள் இந்திய திருநாட்டில் நிரம்பி உள்ளதாக வெள்ளையன் தான் அன்று சொன்னான்.
ஆனால், இன்று ஒரு கோமளிகள் நாடாக மாறிவிட்டது. இதற்கு யார் காராணம் ? நாம் தான். பொதுமக்கள்தான் காராணம்.நம்முடைய வரிப்பணம் கொள்ளை போகும்போது வாய்மூடியிருப்பது. நம்முடைய இயற்கை செல்வங்களை வீணடிக்கும் போது கண்டுக்கொள்ளாமல் செல்வது. நாணயமற்றவர்களை சட்டமன்றங்களுக்கு, நாடாள மன்றங்களுக்கு அனுப்புவது. இதுதான் நமது 5 ஆண்டு விளையாட்டு.

ஆனால், இன்றைய அசாரே அலை அரசியல் கொள்ளைக்காரர்களை பதட்டமடைய செய்துள்ளது. இதுதான் சரியான தருணம். ஒவ்வொரு மாநிலத்திலும் அசேரேக்கள் தோன்ற வேண்டும். நேர்மையான , சமூக சிந்தனைக்கூடிய தலைவர்கள் சட்டமன்றங்களை, நாடாளுமன்றங்களை நிரப்ப வேண்டும்.இதன் மூலம் ஒரு புதிய நாடாக இந்தியா மலர வேண்டும்.

 

இரா. ஜெயானந்தன்.

Series Navigationபஞ்சதந்திரம் தொடர் 7 – தேவசர்மாவும் ஆஷாடபூதியும்