அணையா விளக்கு

 

புதுமை பித்தன்,தமிழ் எழுத்தாளர், வறுமையில் இறந்தார்.
மகாகவி பாரதி , வறுமையில் இறந்தார். இன்றும், பல தமிழ்
எழுத்தாளர்கள் , வறுமையில் வாடி வதங்கினாலும், எழுத்துடந்தான்
வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால், சில பிழைக்க தெரிந்த, எழுத்தாளர்கள், அரசியலையும் கலந்து ஒரு,
கலப்படமான, வாழ்க்கை வாழ்ந்து, பணமூட்டையுடனும், புகழுடனும் வாழ்கின்றனர்.
மற்றும் சில எழுத்தாளர்கள், சினிமாவை நோக்கி நகர்ந்தும், பணத்தை தேடுகின்றனர்.

ஆனால், இவர்கள் யாரும், தன், இறப்பிற்கு பிறகு, சமூகத்திற்கு
அவர்களது படைப்புக்களைத்தான் விட்டு செல்வார்கள்.
ஆனால், தமிழ் – இலக்கியம்- வாழ்க்கை என்ற முக்கோணத்தில் மட்டும்
வாழ்ந்து, தன்னுடைய சொத்து முழுவதையும்( 11 corers,) அனாதை பிள்ளைகளுக்கு
எழுதி விட்டு சென்ற மறைந்த எழுத்தாளர் ஆர். சூடாமணி, இலக்கிய உலகிலும் சரி, சமுதாய வாழ்விலும் அணையா விளக்காக் திகழ்கின்றார்.

சூடாமணி ஏன், அநாதைக் குழந்தைகளுக்கு மட்டும், தன் சொத்தை எழுதி சென்றார். எழுத்தாளர்களுக்கு ஏன் ஒன்றும் செய்யவில்லை ?

எழுத்தாளர்களுக்கு மட்டும், எழுதி இருந்தால், அது, இலக்கியம், எழுத்து என்ற குறுகிய வட்டத்திற்கு மட்டும் போயிருக்கும். ஆனால், அநாதை குழந்தைகள் வளர்ந்து, எழுத்தாளர்களாக, விஞ்ஞானியாக, கலெகடராக,நீதிபதிகளாக, சமூக ஆர்வலராக மலரலாம் என்ற எண்ணம் கூட , அவர்களுக்கு வந்திருக்கலாம்.

சுவாமி விவேகாநந்தர் மேல், பற்றுக் கொண்டும், ராமகிருஷ்ண மடத்தின் தன்னலமற்ற தியாக உள்ளத்துடன் தொண்டாற்றும் சுவாமிகளை நம்பியதால், சூடாமணி, 11 கோடி ரூபாயை, எழுதி
சென்று விட்டார்.

சூடாமணி, உருவத்தில் குறைந்திருந்தாலும், உள்ளத்தில் சமுத்திரத்தைவிட அகலமானவர், ஆளாமானவர் என்றுதான் தோன்றுகிறது. சூடாமணியின் உருவமும், அவருக்கு வந்த வியாதியும்
அவரை, குடும்ப வாழ்வில், ஈடுபாடு இல்லாமல் செய்திருக்கலாம்.

ஆனால், சூடாமணியின் கதைகளின் குடும்ப பாச உறவுகளும், ஆண்-பெண் உறவுகளைப் பற்றிய கதைகள் பரவலாக காணப்படும்.

இது இவருக்கு எப்படி சாத்தியமானது. தன் பெற்றொர்கள் மறைவிற்கு பிறகு, அவர் தனிமையில் வாழ்ந்ததாகத்தான், அவரது, சில தோழிகள் கூறுகின்றனர்.
எழுத்தாளார், வெண்ணிலா, ஒரு முறை பேசும் பொழுது,
சூடாமணி, மாலை நேரங்களில், கார் டிரைவரிடம், கடற்கரைக்கு போகும்படி சொல்வார்.

அங்கு, கார் கதவை மட்டும் திறந்து வைத்துவிட்டு, கடற்கரையில் பரந்துக்கிடக்கும் மக்களையே வெறித்துப்பார்த்து கொண்டிருப்பார். ஆகவேதான், அவரது கதைகளில், மீண்டும் மீண்டும் மனிதர்களே வந்து போவார்கள் என்றும், ஒரு பெண்ணின் ஏக்கம் எப்போதுமே கேட்டுக்கொண்டிருக்கும்” என்று வெண்ணிலா கூறுகின்றார்.

நான்கு சுவர்களுக்கிடையே தன்னை சுருட்டிக்கொண்டாலும், தன் மனவலிமையினால், இவ்வுலகை, வெற்றி கொண்டார். முறையான பள்ளிக்க்ல்வியோ, கல்லூரி படிகளையோ தொடாத, சூடாமணி, தமிழ்,
ஆங்கிலம், சமஸ்கிருதத்திலும் தேர்ச்சி பெற்றார். சங்க இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டு, தன்னாலேயே, படித்து தேர்ச்சி பெற்றார். கர்நாடக இசையிலும் நாட்டம் கொண்டு, அதனையும் முறையாக பயின்றார்.

1954ல், அவரது, முதல் சிறுகதை, வெளியானது. கலைமகள், தினமணிகதிர் இவற்றில் இவரது கதைகள் வெளிவந்தன. 1957 – ல் “காவேரி” என்ற இவரது சிறுகதை கலைமகள் வெள்ளி விழா ஆண்டு பரிசு பெற்றது.

1959- ல், “மனதுக்கு இனியவள்” என்ற இவரது நாவல், நாராயணசுவாமி அய்ய்ர் பரிசு பெற்றது. இந்த நாவலே, இவரை பிரிதிபலிப்பதாக உள்ளது என்றும் கூறுகின்றார்கள்.

பணத்தாசை பிடித்து அலையும், மனித வாழ்வில், ஊனமான ஒரு பெண்,
எப்படியெல்லாம், வஞ்சிக்க படுகின்றாள் என சித்தரிக்கப்படுகின்றது.

மற்றும், இவரது சிறுகதைகள் பம்பாய் தழிழ் சங்கம், ஆனந்த விகடன்
போட்டியிலும் பரிசு பெற்றன.

1974 -ல் இவரது” மனித அம்சம் ” என்ற நாவல், கற்பழிக்கப்பட்ட ஒரு
பெண்ணை மையமாக வைத்து எழுதப்பட்டது.

இதில் இவரது நடை, உயர்வாக பேசப்பட்டது.

1980-ல், வெளியான இவரது, “கண்ணம்மா என் சகோதரி” என்ற நாவல்,
மனோ தத்துவ ரீதியில், ஒரு பெண்ணின் மன உணர்வுகளை அலசுகின்றது.
இதில், பெண்ணின் திருமண உறவு, கணவன் – மனைவி ஈடுபாடு, உறவு, பந்தம்,
பாசம் போன்ற வாழ்வின் வெகு ஆழமான உறவுகளை அலசுகின்றார் சூடாமணி.

சூடாமணி, தன்ணையறியாமலேயே, ஒரு, பெண்ணியவாதியாக, அந்தக்
காலத்திலேயே, வெளிப்படுத்திவிட்டார்.

1638-ல், அமெரிக்காவில்,John Howard-, என்ற இளம் அமைச்சர், நோயின் கொடுமையால், உயிர் பிரிந்தது. ஆனால், அவர் உயிலில், தன் நூலகத்தையும், சொத்தில் சரி பாதியினையும், பொதுமக்களுக்கு,எழுதி விட்டார். இன்று, மிகவும், பிரபலமான, அவரது,பெயரை தாங்கி, பெருமையுடன் விளங்கும் பல்கலைக் கழகம்” HOWARD”

இன்று, Howard University–, பல்லாயிரக்கணக்கான, அறிவாளிகலை, உருவாக்கும், பல்கலைக் கழகமாக, விளங்குகின்றது.

இது போல், சூடாமணியும், பல்லாயிரக்கணக்கான, அநாதை மாணவர்களின், வாழ்விலும், அணையா விளக்காக ,ஒளிவிட போகின்றார்.

இரா. ஜெயானந்தன்.

Series Navigationமுள்வெளி – அத்தியாயம் -2பஞ்சதந்திரம் தொடர் 37 – விதிப்படி உரியதை ஒருவன்அடைந்தே தீருவான்