மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
இத்துடன் வாசகர் புனைப் பெயருக்கு ஒரு பதில் கடிதம் வைத்திருக்கின்றேன். போட நினைத்தால் போடலாம்
தமிழ் நாட்டில் சமூக நலத்துறையில் என்ன பணிகள் என்பதெ பலருக்கும் தெரியாது. அதுவும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை. யார் கஷ்டங்களைப் போக்க பணிக்கு வந்தோமோ நாங்களே பாதிக்கப் பட்டோம். இந்தியாவிலேயே பெண்கள் பிரச்சனைகளுக்குப் பெண்கள் அமைப்புகள் தமிழகத்தில்தான் தோன்றியது. இன்னும் இரு அத்தியாயம் சென்றவுடன் வருபவர்கள் அனைவரும் வரலாற்றுப் பெண்மணிகள். இந்தியவில் எங்கும் இல்லாத ஓர் சிறந்த அமைப்பு இங்குள்ளது. அதை உணராத ஒரு பெரியவர் உத்தர பிரதேசத்தை ஆய்வு செய்து இந்த ஆலமரத்தையே வெட்ட எழுதி வைத்துவிட்டார். தனி ஒருத்தி போராடினேன். அறிஞர் அண்ணா புரிந்து கொண்டார். நடக்க இருந்த தவறை நடக்காமல் செய்தார். இதுவரை யாருக்கும் தெரியாது. திண்ணையில் வரும் தொடரை வெளியில் பலரும் படித்து வருகின்றர்கள் இது நிரந்த பதிவேடாகவும் இருக்கும். துன்பங்களை வெளிப்படையாகக் கூறி வருவதற்குக் காரணம் தேவையற்ற பழிகள் எங்கள் பெண்கள் மீது. அதுமட்டுமல்ல எங்களை வெறும் அலங்காரப் பொம்மைகள் என்று எழுதிவைத்து அதனைப் பத்திரிகைகளீலும் வரச் செய்தார்கள். அந்தப் பழியைத் துடைக்க வேண்டும். அதனால்தான் வரலாற்றுச் செய்தியுடன் வெளிப்படையான அனுபவங்களும் வருகின்றன. நேச குமார் போன்றவர்கள் துணிவுடன் எழுதிய இணைய இதழ் திண்ணை. அதனால்தான் இதில் எழுத விரும்பினேன். உங்களுக்கு விருப்பமில்லையென்றால் சொல்லிவிடுங்கள். உடல் நிலை காரணம் காட்டி எழுதுவதை நிறுத்திவிடுகின்றேன். நிச்சயம் உங்களுக்கு தர்ம சங்கடம் தரமாட்டேன்
இணைய இதழ் குமுதம் ஆக்க் கூடாது. அங்கு விவாதம் ஆரம்பித்து திஐ மாறுவதும் சொல்ல வந்த நற்செய்தியே சொல்லப்படாமல் பொவதும் சாபக் கேடு. விமர்சன்ஃபகள் வரலாம். ஒரு சிலர் விமர்சங்கள் எழுதியே பெயர் வாங்குவார்கள். அதனால் உண்மைகள் வருவது நின்று விடுதல் கூடாது. படைப்பாளகள் பதில் எழுத வேண்டிய்தில்லை. பணிவுடன் திண்ணைக்கு நான் இதனைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எழுத்தாளன் அவன் எண்ணங்களைச் சுதந்திரமாக எழுதட்டும். அவன் எழுத்து வாழ்வதோ வீழ்வதோ அதன் சத்தியத்தையொட்டி இருக்கும். . தவறாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்.
இன்ற ஆத்ம திருப்தியுடன் கடை நாட்களை நான் எண்ண முடிகிறதென்றால் என்னால் முடிந்த அளவு சமுதாயத்திற்கு உழைத்துவிட்டேன். ஆண்டவனுக்குத் தெரிந்தால் போதும்.
உங்களிடம் மட்டும் ஓர் உண்மையைச் சொல்கின்றேன். காமராஜர் மட்டுமல்ல, கலைஞர், எம்.ஜி. ஆர், முரசொலி மாறன் போன்றவர்கள் எனக்கு நேரிடையாகப் பழக்கமானவர்கள். காமராஜர் அவர்களுக்கு என்னை அதிகம் தெரியாது. ஆனால் மற்ற மூவருக்கும் என்னை மிகவும் நன்றாகத் தெரியும். எல்லோரிடமும் நல்ல குணங்களும் உண்டு. இவர்களீடம் உள்ள மனித நேயம் எனக்குத் தெரியும். அரசியலில் எல்லோரும் குப்பைகள். சுயநல வாதிகள். மறுக்கவில்லை. கலைத் துறை, அர்சியல் உலச்கத்திற்கு பெண்கள் விளையாட்டு பொம்மைகள். அதுவும் தெரியும். எல்லோரும் எழுதி புளித்துப் போனவைகள். ஆனால் இவர்களிடன் நான் கண்ட மனித நேயத்தைப் பலருக்குத் தெரியாது. மணியனும் பலரின் வெறுப்புக்காளானவர் என்பதும் தெரியும். சாவி விகடனை விட்டு வெளி வந்ததற்குக் காரணமே மணியன்தான். எல்லோரும் என் நண்பர்களே. ஒரு தாய்க்கு தன் பிள்ளைகள் தவறு செய்யும் பொழுது கோபம் வரும் திட்டுவாள் அடிப்பாள், ஆனால் அவளால் வெறுக்க முடியாது. என்னால் இந்த உலகில் பிறந்த யாரையும் வெறுக்க முடியாது. இதுதான் நான்
திண்ணை உரிமையாளருக்கும் ஆசிரியர் குழாமிற்கும் நன்றி
வணக்கம்
சீதாம்மா
(திண்ணையில் பலதரக் கருத்துகளும் வழமை போலத் தொடர்ந்து வெளிவரும். கருத்துத் தெரிவிக்கும் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் : தயவு செய்து ஆக்கங்களின் மையப் பகுதியை விட்டு விலகாமலும், நாகரிகமாகவும் விமர்சனங்களை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். – திண்ணை ஆசிரியர் குழு)
- அன்புத் தம்பி புனைப் பெயருக்கு
- முள்வெளி – அத்தியாயம் -3
- சந்திரா இரவீந்திரன் ‘நிலவுக்குத் தெரியும்’ நூல் வெளியீட்டு நிகழ்வு
- ஏப்ரல் 29, 21: பாரதிதாசன் பிறந்த நாள்-மறைந்த நாள் நினைவுச் சிறுகதை: ஒரு சந்திப்பு, ஓர் அங்கீகாரம்
- தகழியின் ’செம்மீன்’ – ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னும் புதிதாய்
- தங்கம்
- தமிழில் ஒலிவடிவமும் சொல்லமைப்பும்- மற்ற மொழிகளோடு ஒரு ஒப்பீடு
- கொசுக்கள் மழையில் நனைவதில்லை.
- கவிஞர் சக்திஜோதியின் ‘நிலம் புகும் சொற்கள்’கவிதை தொகுப்பின் அறிமுகமும் விமரிசனமும்
- சுணக்கம்
- வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து – தீ வளர்க்கும் தியானம் – 5
- ஒரு வேண்டுகோள்:உதவிக் கரங்களை எதிர்பார்க்கும் ஞானாலயா
- சங்ககிரி ராஜ்குமாரின் ‘ வெங்காயம் ‘
- பஞ்சதந்திரம் தொடர் 37 38 – சோமிலகன் என்ற நெசவாளி
- Behind the Beautiful Forevers- ’கேதரின் பூ’வின் புத்தகத்தை முன்வைத்து
- சோபனம்
- குதிரை வீரன்
- கடைசித் திருத்தம்
- தூக்கணாங் குருவிகள்…!
- யானைமலை
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) அங்கம் -2 பாகம் – 18
- அரிமா விருதுகள் 2012
- விளையாட்டு
- புதுப்புனல் விருது 2012 ஏற்புரை – நானும் என் ஸ்குரூ டிரைவரும்
- மொழியின் எல்லையே நம் சிந்தனையின் எல்லை!
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -20
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! காஸ்ஸினி விண்ணுளவி சனிக்கோளின் துருவங்களில் நோக்கிய தோரண ஒளிவண்ணங்கள் (Aurora) !
- “சூ ழ ல்”
- வார்த்தைகள்
- ஓ… (TIN Oo) ………….!
- உங்களில் யார் அடுத்த பிரபுதேவா
- அதுவே… போதிமரம்….!
- சவக்குழி
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 14) எழில் இனப் பெருக்கம்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்து நாலு
- தாகூரின் கீதப் பாமாலை – 7 இனியது வாழ்க்கை.
- பழமொழிகளில் கிழவனும் கிழவியும்
- “சமரசம் உலாவும்……..”
- எஸ்.ஷங்கரநாரயணனின் ம.ந.ரா.பற்றிய கட்டுரை
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – – 7
- Ku.Cinnappa Bharathy Award 2011
கண்டிப்பாக உங்கள் நினைவலைகளை நீங்கள் எழுதும் முறையில் எழுதுங்கள். எனது கோபம் வேறு… எத்துனையோ பேர்கள் முகமூடிகளை கிழிக்காமல் போனதால், வல்லவர்கள் மட்டுமே நல்லவர்களாக தோற்றம் கொண்டு இன்று. அது தான் ஆதங்கம். மற்றபடி, உங்கள் நினைவலைகள் உங்களது… குளத்தில் விழும் கல்லாக , நினைவலைகளை பரந்து விரிக்கும் காட்டலிஸ்டாக, இருக்கும் பின்னோட்ட வகையறா என்னது. ஆனால், இனி என் பின்னூட்டம் இராது. வணக்கமுடன் உங்களுக்கு, பு.ப.
அப்படி பலரின் முகமூடிகளைக்கிழித்தெறிந்து அவர்கள் உண்மை வேசங்களைக் காட்ட விழைந்தால் அதை ஒரு தனிக்கட்டுரையாக வரைந்து திண்ணைக்கனுப்பலாம். மாறாக, எல்லாக்கட்டுரைகளிலும் நுழைந்து, தலைப்புக்குத் தொடர்பேயில்லாமல், ஈவெரா, கருன்நானிதி, அண்ணாத்துரையென்று தமக்குப்பிடிக்காப் பெரும்புள்ளிகளை கடுமையாக விமர்சித்தல் சரியில்லை. பு.ப போல சுமிதா, தங்கமணி, பாண்டியன் போன்றோர் இப்படிப்பின்னூட்டங்களில் கோபத்தைக்காட்டாமல், தனிததனிக்கட்டுரைகளில் தங்கள் கோபத்தைக்காட்டலாம்.
காவ்யா, நீங்கள் தான் அப்படி செயல்படுகிறீர்கள். சாத்தான் வேதம் ஓத வேண்டாம். நான் என்ன செய்கிறேன் என்று எனக்கு தெரியும். வயதை கணக்கில் கொண்டே சீதா அவர்களுக்கு எனது பதில் அமைந்தது. ரசம் போன காலக் கண்ணாடியிலும் முகம் திருத்திக் கொள்ளலாம்… அது தான் நான் முயற்சித்தது.
ஈவெராவைப்பற்றி கட் பேஸ்ட் பண்ணி பக்கத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறார் சுமிதா பாமபன் சுவாமிகள் பற்றிய பதிவில். அங்கே மட்டுமே எங்கேயும் ஈவெராவைப்பற்றித்தான். அவர்களை விட்டால் அண்ணாத்துரை, கருன்நானிதி. இதைத்தான் குறிப்பிடுகிறேன். பு பவுக்கும் இந்த திராவிடத்தலைவர்களின் அப்சசந்தான். தவறில்லை. ஆனால் ஏன் பொருத்தமில்லாவிடங்களின் என்பது மட்டுமே கேள்வி.
பின்னூட்டங்கள் தணிக்கைக்குள்ளாக்கப்படலாம்.தான் ஆனால் அது விரும்பத்தக்கன்று. இணையதள விவாத அரங்குகள் மட்டுமல்லாமல், செய்தித்தாள்கள் கூட பின்னூட்டங்களைத்தாராளாமாக வெளியிட்டுவரும் நிலை தற்போது. அவர்களின் தணிக்கை வெகுவெகு குறைவு.
எழுத்துக்களுக்கு போல் இனி பின்னூட்டங்களுக்கும் தணிக்கைமுறை வைக்கலாம். ஆனால்,நான் எழுத்துக்களை விட அதிகமாக பின்னூட்டங்களை எல்லா இணைய சஞ்சிகைகளிலும் படிக்கிறேன். அதில் தான் பல பல உண்மை நிலைகள் வெளிப்படுகின்றன.. ஆனால், கருத்து நிலை தாண்டி தனி தாக்குதலையும், ஆபாச வார்த்தை பிரயோகங்கள், போன்றவை அனுமதிக்கப் படக் கூடாது. திண்ணையில் தான் முதன் முதலில் போலித்தனமற்ற புதிய கோணத்திலான கட்டுரைகள், செய்திகள் நான் படித்தேன்… திண்ணை இணையத்தில் ஒலி / ஒளி வடிவ பத்திரிக்கையாகவும் உருப்பெற வேண்டும்….