வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – – 7

This entry is part 40 of 41 in the series 8 ஏப்ரல் 2012

கொக்கொக்கக் கூம்பும் பருவத்து மற்றதன குத்தக்க சீர்த்த இடத்து. நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. ஆனால் பெண்ணின் நிலை சோதனைக் களத்தில் வெந்து கொண்டிருந்தது. பெண் கற்கச் செல்வது கூடப் பிரச்சனை. அவள் பேச்சு, நடை உடை பாவனை எல்லாம் மற்றவர் பரிசோதனைப் பார்வையில் இருந்தன. பணிகளில் இருவிதங்கள்.. ஓரிடத்தில் இருந்து பணி யாற்றுவது ( sedantary ) இன்னொன்று பல இடங்களுக்குச் சென்று பணியாற்றுவது. அதாவது களப்பணி. அதிலும் ஆடவர்களுடன் சேர்ந்து செய்யும் பணி. முதலில் வம்புக் […]

எஸ்.ஷங்கரநாரயணனின் ம.ந.ரா.பற்றிய கட்டுரை

This entry is part 39 of 41 in the series 8 ஏப்ரல் 2012

எஸ்.ஷங்கரநாரயணனின் ம.ந.ரா.பற்றிய கட்டுரை சூப்பர். சிற்றிதழ்கள் பால் அவர் கொண்ட ஈடுபாடு விலையில்லாதது. அவரது ‘ அம்மணதேசம் ‘ இப்படி ஒரு வம்புக் கதைதான். ஜெயில் கைதி ஒருவனின் அண்டர்வேர் கிழிந்து விடுகிறது. அவன் வேறு வழியில்லாமல் குடியரசு தினத்தன்று ஏற்றப்பட்ட கொடியை மறுநாள் எடுத்து உள்ளாடையாக பயன்படுத்திக் கொள்கிறான். யாரும் வெளியிட முன்வராத போது நான் சிறகில் வெளியிட்டேன் என்பது இதழுக்குப் பெருமை. இன்றளவும் அவர் என் இதழுக்கு எழுதிவருகிறார் என்பது என்பால் அவர் கொண்ட […]

“சமரசம் உலாவும்……..”

This entry is part 38 of 41 in the series 8 ஏப்ரல் 2012

இந்துக்கள் தேசத்தில் சமரசம் ஒரு கெட்ட வார்த்தை ஆகிப்போனதன் வரலாறு என்ன? நான்கு வேதங்களும் நான்கு ரகசிய மொழிகளாய் (நான் மறை(ப்பு)களாய்) இருந்தது வெளிச்சத்துக்கு வந்ததன் காரணமே இந்த வரலாறு. இப்போது அதன் உட்பொருளை உற்றுப்பார்க்கத் துவங்கிவிட்டனர். அதுவும் ஆங்கிலச்சன்னல் மூலம் தான். இந்து மதம் உண்மையில் சிந்து மதம். சிந்து என்ற தமிழ்ச்சொல்லில் பிறந்த ஆற்றுப்படுகையின் நகர்களில் இருந்து தோன்றியது தான். ந‌க‌ர் எனும் தொழில் ஆகுபெய‌ரே இங்கு ந‌க‌ர் ஆயிற்று அதுவே தேவ நாகரியும் […]

பழமொழிகளில் கிழவனும் கிழவியும்

This entry is part 37 of 41 in the series 8 ஏப்ரல் 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com மனிதனுக்குப் பல பருவங்கள். ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு பெயர். பிறப்பிலிருந்து இறப்புவரை மனிதனின் பருவங்களுக்குத் தனித்தனியான பெயர்கள் வழங்கப்படுகின்றன. குழவி, இளங்குழவி, சிறார், விடலைப் பருவம், குமரப்பருவம், இளைஞன், நடுவயதுக்காரன், கிழவன், கிழடு, வன்கிழடு என்று பல பெயர்கள் இம்மனிதப் பருவங்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கு அரிவை, தெரிவை, பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, பேரிளம்பெண் என ஏழு பருவங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒவ்வொரு […]

தாகூரின் கீதப் பாமாலை – 7 இனியது வாழ்க்கை.

This entry is part 36 of 41 in the series 8 ஏப்ரல் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பூரிப்பில் உள்ளேன் என் கண்மணி ! புதைந்து என் உள்ளத்தில் ஊறிப் போய் உவப்பு நிரம்பி யுள்ளது. எதுவும் கேளாதே என்னிடம் எங்கும் ஓடாதே எனைப் பிரிந்து என்னை மட்டும் நோக்கு ! என்னையே சுற்றிக் கொண்டிரு என்னருகில் தங்கி ! கண்களின் மூலம் காதலை மட்டும் வெளிப்படுத்து ! அர்ப்பணம் செய் உன்னை மௌனமாய் இனிய சொற்களில் நுணுக்கமாய் இன்னிசைப் பாடல்கள் எழுது.. […]

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்து நாலு

This entry is part 35 of 41 in the series 8 ஏப்ரல் 2012

1927 ஃபெப்ருவரி 28 அக்ஷய மாசி 16 திங்கள் பிராமணோத்தமரே என்னை மன்னித்தேன் என்று சொல்லும். முதலில் அதைச் சொல்லாவிட்டால் நான் உம்மோடு ஒரு போதும் பேசப் போவதில்லை. நான் காலில் விழாத குறையாகச் சொன்னேன். மலையாளத்துப் பிராமணன் மூச்சை உறிஞ்சி சமுத்திரத்து உப்புக் காற்று வாசனையை பரிமள சுகந்தமாக அனுபவித்தபடி என்னை தீர்க்கமாகப் பார்த்தான். ஆதி நாட்களில் அதாவது நான் மதராஸ் பட்டிணத்தில் காராகிரகம் புகுந்த காலத்தில் இவன் பார்வை பட்டுத்தான் இன்றைக்கு இப்படி கப்பலில் […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 14) எழில் இனப் பெருக்கம்

This entry is part 34 of 41 in the series 8 ஏப்ரல் 2012

+++++++++++++++++++++++ காதல் தீர்க்கதரிசி +++++++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் […]

சவக்குழி

This entry is part 33 of 41 in the series 8 ஏப்ரல் 2012

இருசக்கர வாகனத்தில் செல்லும் போது எதிர்ப்படும் சவ ஊர்வலக் காட்சியைக் காணும் போது நாமும் ஒரு நாள் என்று நினைக்கத் தவறுதில்லை என்றோ ஒரு நாளுக்காக எல்லா நாளும் துயரப்பட என்னால் முடியாது ஆனால் அந்த ஒரு நாள் மிகச் சமீபமாய் இருந்தால் விடைபெறுதல் எளிதல்ல எப்போது மரணம் அழைத்தாலும் செய்வதற்கு ஏதாவது வேலை இருந்துகொண்டேதான் இருக்கும் நமக்கு என்றேனும் உயிர்த்தெழுவேனென்று எனதுடலை பாதுகாக்காதீர்கள் உயிர்த்தெழுதல் ஒரு முறையே நிகழும் தேவ காரியங்களுக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பேன் என்பது […]

அதுவே… போதிமரம்….!

This entry is part 32 of 41 in the series 8 ஏப்ரல் 2012

பகவானே….என்ன சோதனை…. இது? ….என் தலையெழுத்தே… இவ்வளவு தானா? அவருக்கு ஒண்ணும் ஆயிடக் கூடாதே……அவரைக் காப்பாத்தும்மா… தாயே… உன் கோயில் வாசல்ல…..வந்து மண்சோறு சாப்பிடறேன்…அவர் என்ன செய்திருந்தாலும் அவரை மன்னித்துவிடு… தாயே…லோகமாதா…அவரை எனக்கு திருப்பித் தா…இது நாள் வரைக்கும் உன்னையன்றி எனக்கு வேற எந்த கதியும் இல்லையே..என் குடும்பத்தைக் காப்பாத்திக் கொடும்மா…அகிலாண்டேஸ்வரி… இதயத்தைப் பிழிந்து வேண்டிக் கொண்டதால் வேதனையில்… கண்களில் இருந்து போல பொலவென்று கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. இந்தக் கலங்கிய கண்களுக்கு காரணமான மீனாட்சியின் கணவர் […]