அம்மாவின்?

Spread the love

 

 

அம்மாவே ஆசான்

அந்த ஓவியன்

முதலில் தன்னை

வயிற்றில் சுமந்த நிலை

 

பின்னர் கையில்

பாலாடை

 

அடுத்து அமுதூட்டும்

கிண்ணத்துடன்

 

கையில் கரண்டியும்

அருகில் அடுப்பும்

 

பேரனைச் சுமக்கும்

நடுவயது தாண்டிய

கைகள்

 

அம்மாவை ஓவியமாய்

காலங்கள் தோறும்

தீட்டி வைத்தான்

 

வெகு நாள் கழித்து

அம்மா கையில்

தூரிகை சுழன்றது

 

அர்த்த நாரிஸ்வரன்

ஒரு பக்கத்தில்

அவளது பாதி

முகமும் வடிவும்

 

மறுபக்கம் நீண்டு

உயர்ந்து

நின்றது

கேள்விக் குறி

 

Series Navigationதொடுவானம் 109. விழாக்கோலம் கண்ட தமிழகத் தேர்தல்