அரூப நர்த்தனங்கள்

 

1. சும்மா கிடந்த காற்றை 

சுழட்டி சுற்றுகிறது மின்விசிறி

தாள்களுக் கிடையே

நுழைந்து வழிந்தோடி

ஆடைகளை அசைவித்து

திரைச்சீலைக்கு பின்னால்

ஒளிந்து விளையாடும்

குட்டிகள் தீண்டிவிடாமல்

எரியும் சுடரொன்று

கண்ணாடிச் சுவர்களுக்குள்

சிரிக்கிறது சிமிட்டுகிறது

2. காற்றில்

கயிறு திரித்து

உள்ளே இறங்கினேன்

பிடி இறுக

இளகிய கயிறு

நூலானது

நூல் பிடித்து

ஆழம் போனேன்

சேர்ந்த இடத்தில்

பிடி இல்லை

நூலும் இல்லை

கால நேரம்

தெரியவில்லை

இடமே இல்லை

இமையற்ற கண்ணொன்று

விழித்திருந்தது.

Series Navigationஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி அணுமின் உலை விபத்துக்குப் பிறகு மீண்டும் துவங்கியது (1995 – 2010)இனிவரும் வசந்தத்தின் பெயர்