அறியாமை

 

 

குருவிவீடு நாமேயென்று

கூலம் அறியாது

 

வண்ணம் நமக்குள்ளென்று

வெள்ளை அறியாது

 

தின்றமீதி கழுகுக்கென்று

புலிகள் அறியாது

 

தன்வீடு பாம்புக்கென்று

கறையான் அறியாது

 

மண்ணுக்குயிர் தாமுமென்று

மண்புழு அறியாது

 

தன் எச்சம் விருச்சமென்று

காகம் அறியாது

 

தன்மூச்சு உயிர்க்காற்றென்று

செடிகள் அறியாது

 

விபூதி நாம்தானென்று

சானம் அறியாது

 

தாகம் தணிப்போமென்று

மழை அறியாது

 

எறும்புக்கு நிழலென்று

இலைகள் அறியாது

 

பாலுக்கே நாமென்று

பசுக்கள் அறியாது

 

பறப்பது தன்னாலென்று

காற்று அறியாது

 

தன்கனி கிளிக்கென்று

மரங்கள் அறியாது

 

மண்னுக்குறுதி நாமேயென்று

வேர்கள் அறியாது

 

வெற்றி தன்னாலென்று

தோல்வி அறியாது

 

புயல் நாம்தானென்று

தென்றல் அறியாது

 

தன் எச்சில் புடவையென்று

பட்டுப்புழு அறியாது

 

நம்மால் முடியுமென்று

நாமே அறியோமே

 

அமீதாம்மாள்

Series Navigationபாரதியும் சிறுகதை இலக்கியமும்என் நண்பர் வேணுகோபாலனின் ‘தர்ப்பண சுந்தரி’ என்ற கதைத் தொகுப்பு