அழகின் மறுபெயர்……

Spread the love

 

(11.9.2018)

 

ஆகாயத்தின் அருகில்

நட்சத்திரங்களை

அள்ளிக்குவிக்கும்

ஊற்று….

 

ஒளிமலர்களைப்

பருகிப்பார்த்து

துடிப்பின் லயம்

தட்ப வெப்ப நிலையாய்…

 

தண்ணீரிலும்

வெப்பம் தீண்டுவது;

ஆவியாய் முகம்காட்டுவது

உச்சரிப்பின் உச்சமாகும்

 

எதையும்

மறைக்காத தருணங்களில்

எல்லாம்

தானாய்க் கரைகிறது….

 

வைட்டமின் வாழ்க்கை

கைவசமாகிறபோது

அரிய தரிசனம்

கைகூடிவிடுகிறது

 

 

ஒருபாதி  வையத்திற்கு

இப்படி

இறந்து பிறப்பது

இயல்பாகிவிடுகிறது

 

இன்னொரு பாதி

அறியப்படாத கோள்களாய்

சுற்றிவருகிறது

 

பகலின்

மறுபக்கத்தை

அழகின் மறுபெயர்

என்பதே அழகு

 

Series Navigationபூமியைத் தாக்கும் முன்பே முரண்கோள் போக்கை நோக்கித் திசை மாற்றவோ, தகர்க்கவோ நாசா புதிய திட்டம் வகுக்கிறது.மருத்துவக் கட்டுரை குருதி நச்சூட்டு ( SEPTICAEMIA )