அழகு

     dinamalar-elango

 

  நீ

  மின்னிச்சிரிக்கிறாய்

  சிரித்து அழைக்கிறாய்

  பூத்து மணக்கிறாய்

  மணந்து ஈர்க்கிறாய்

  கொடுத்துச் சிறக்கிறாய்

  சிறந்து கொடுக்கிறாய்

  பெய்து நனைக்கிறாய்

  நனைத்துச் செழிக்கிறாய்

  காய்த்து கனிகிறாய்

  கனிந்து சொரிகிறாய்

  இருப்பிலும் இழக்கிறாய்

  இழப்பிலும் இருக்கிறாய்

  உடுத்தலில் தெரிகிறாய்

  உதிர்தலில் விழிக்கிறாய்

  வீழ்தலில் எழுகிறாய்

  உன்னைப்

  பார்த்து ரசிக்கிறேன்

  ரசித்துப்பார்க்கிறேன்

  பார்த்துச் செய்கிறேன்

  செய்து பார்க்கிறேன்

  விழுங்கி மகிழ்கிறேன்

  மகிழ்ந்து விழுங்குகிறேன்

  நீ

  அனைத்திலும்

  விரவிக்கிடக்கிறாய்

  விரிந்துகிடக்கிறாய்

  மனமும் விழியும்

  ஒன்றிப்பருகினால்

  சாயல் புலப்படும்

  எளிமையாயும்

  எல்லோர்க்கும் கிடைக்கிறாய்

  இயலாதோருக்கு

  உன்

  சாயலைத்த தருகிறாய்

  சாயலே

  சாயல்தான்

 

 

{28.08.2014 மாலை எம் ஆர்டியில் கிளிமெண்டி அருகே எழுதியது}

Series Navigationபுரிந்து கொள்வோம்ஆழி …..