அவன் வாங்கி வந்த சாபம் !

Spread the love

        

 
     ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
 
அவன் பாதையெங்கும்
முட்கள்
காடாய் வளர்ந்துள்ளன
 
ஆயிரம் கவிதைகள்
படித்து ரசித்த பின்னர்
நான்கு வரிகள் கூட
அவனிடம் இல்லை
 
அவன் எழுதும் கவிதைகளில்
அழகு நடனமாடும்
ஆனால் சொற்கள்
அவன் மனம் தங்காமல்
வெறுமை கொண்டு நிற்கும்
 
கட்டுரை எழுதி முடித்த பின்னர்
எல்லா சொற்களும் வடிந்து
கழுவிய தரை போலாகிவிடும்
 
திரும்பிப் பார்க்கையில்
அவன் இலக்கிய வயலில்
சில இளம் நாற்றுகள்
அழகாகத் தலையாட்டிக் 
கொண்டுதான் இருக்கின்றன !
Series Navigationதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]முதன்முதல் பொது விண்வெளி ஆய்வலர் நால்வரை அகில நாட்டு விண்வெளி நிலையத்தில் இறக்கிய ஸ்பேஸ்X மீட்சி ராக்கெட் விண்சிமிழ்.