ஆட்டம்

Spread the love

ஆட்டம்
சூடு பிடித்திருக்கும்.

கணிணியும் அவனும் மோதும் உச்சக்கட்டத்தில்
கவனத்தின் குண்டூசி முனையில் இறுதிப் போர் நடக்கும்.

தன்னையே
தான் பணயம் வைத்து ஆடுகிறானா?

கடைசி
நகர்த்தலில் கணிணி நகைக்கும்.

காணோம்
அவன்.

தேடி
’மெளஸைக்’ ‘கிளிக்’ செய்தால் மெலிதாய்க் கீச்சிடுவான்.

கு.அழகர்சாமி

Series Navigation