author

குழந்தையாகி நல்கி

This entry is part 1 of 14 in the series 19 மார்ச் 2023

எப்படி அகம் மலர்ந்துமுகமெல்லாம் சிரிக்கும்கைக்குழந்தையைத் தன்இடுப்பிலேந்தி அவள்கையேந்தும் முன்,குறிப்புணர்ந்து அவன்,குலையிலோர் ’இளநி’யைச் சீவிஅவள் இரவாதது போல் ஏற்கஅவன் ஈயாதது போல் அளிக்கிறான்ஈதலும் இரத்தலுமின்றிஉயர்ந்தென்றும் இழிந்தென்றுமின்றி?ஆச்சரியமாய் அதை நான்கண்டபோது தான் கண்டேன்அவ்வளவு அது ஆச்சரியமில்லையென்று,எவ்வளவு அழகாய்அவள் குழந்தை தன்அமுதமெனும் கொள்ளைச் சிரிப்பைபிறர் இரந்து தான் ஈயாததாயும்தான் ஈந்து பிறர் ஏற்காததாயும்யாவருக்கும் –ஒருவருக்கல்ல-வாரி வழங்குதலைக் கண்டு-ஒருவேளை எனக்கு முன்னமேயேஅவன் குழந்தையை நான்கண்டது போல் கண்டுஆச்சரியமாகி ஒரு கணம்தானே குழந்தையாகிக்குழந்தையைப் போல்யாவருக்கும் இல்லையாயினும்குழந்தையின் தாய்க்குஅப்படிஇளநியை நல்கினானோ?ஆனால்வெறுமனே குழந்தையைக்கொஞ்சுவதை விடஎவ்வளவு இயல்பாய்எவ்வளவு மேலானது […]

நினைவில் படபடத்த தட்டான் பூச்சி

This entry is part 3 of 18 in the series 5 மார்ச் 2023

கு. அழகர்சாமி அசதியாயிருக்கும் அந்திவானில் சுறுசுறுப்பாய்த்  திரியும் தட்டான் பூச்சிகள் கண்டு சிறு வயதில் நான் குறும்பாய் வாலில் நூலை முடிச்சிட்டு வேடிக்கை பார்த்த ஒரு தட்டான் பூச்சியின் நினைவு உயிர்த்தது. உயிர்த்த என் நினைவில் உயிர்த்துப் படபடத்த தட்டான் பூச்சி பறக்கும் மற்ற தட்டான் பூச்சிகளோடு சேர்ந்து என் நினைவின் பிடியிலிருந்து தப்பித்துப் பறந்து போக ஆசைப்பட்டது. ஆசையாய் அது பறந்து போக, என் நினைவுள் நான் நுழைந்து நான் முடிச்சிட்ட நூலை நானே அவிழ்த்து […]

இரு கவிதைகள்- கு.அழகர்சாமி

This entry is part 2 of 8 in the series 5 பெப்ருவரி 2023

கு.அழகர்சாமி (1) பாழ் ஒன்றும் இல்லாதிருத்தலே இருத்தலாகிய இருத்தல் பிடிபடாது போய்க் கொண்டே இருத்தலின் வியாபகமா? ஒன்றும் விளையாதவைகள் வேர் விட்டு கிளைத்து விளைந்த வெற்றின் வெறுங்காடா- விதானமில்லாதலிருந்து தனக்குத் தானே தூக்கிலிட்டுக் கொண்ட சூன்யம் எதுவோ அதுவா- பாழ்? (2) பொட்டல் ஊரில் தெருத் தெருவாய் சைக்கிள் விட்டுத் தேடினாலும் தேட முடியுமா, இப்போது ஊராகிப் போன, சிறு வயதில் நான் வியர்க்க வியர்க்க சைக்கிள் ஓட்டிப் பழகிய தெருக்களென்று இல்லாத பொட்டலின் ஒரே தெருவில்லாத […]

இரு கவிதைகள்

This entry is part 1 of 20 in the series 29 ஜனவரி 2023

கு.அழகர்சாமி (1) பாழ் ஒன்றும் இல்லாதிருத்தலே இருத்தலாகிய இருத்தல் பிடிபடாது போய்க் கொண்டே இருத்தலின் வியாபகமா? ஒன்றும் விளையாதவைகள் வேர் விட்டு கிளைத்து விளைந்த வெற்றின் வெறுங்காடா- விதானமில்லாதலிருந்து தனக்குத் தானே தூக்கிலிட்டுக் கொண்ட சூன்யம் எதுவோ அதுவா- பாழ்? (2) பொட்டல் ஊரில் தெருத் தெருவாய் சைக்கிள் விட்டுத் தேடினாலும் தேட முடியுமா, இப்போது ஊராகிப் போன, சிறு வயதில் நான் வியர்க்க வியர்க்க சைக்கிள் ஓட்டிப் பழகிய தெருக்களென்று இல்லாத பொட்டலின் ஒரே தெருவில்லாத […]

பீதி

This entry is part 3 of 14 in the series 24 ஜனவரி 2021

அலங்கரிக்கப்பட்ட மலர்ப் பாடையிலிருந்து அறுந்து வீழ்ந்து மிதிபட்டு நசுங்கி- வறிய தெருநாய் சாவினை முகர்ந்ததெனும் நறுமாலைகள் சிதறிக் கிடக்க- நகர்ச் சாலையில் சுடலை நோக்கி சாவதானமாய் நகரும் சவ ஊர்வலத்தின் பின் வழி விட- விடாது ஒலி ஒலித்து இங்கிதமற்ற பேருந்து அவசரப்படுத்தும் பதற்றத்தில் பிணம் பயந்ததெனும் பயம் பிணத்தினின் பயமாயிருக்கும்- விழி இடுங்கிப் பிணத்தை வெறித்தபடி ஊரும் பேருந்துக்குள் உறைந்து கடக்கும் எனக்கு. கு.அழகர்சாமி

மூட முடியாத ஜன்னல்

This entry is part 6 of 12 in the series 17 ஜனவரி 2021

எங்கேகின வெளியில் புறாக்கள்? சப்திக்கிறதே சடுதியில் மழை புறாக்கள் சிறகடிப்பது போல். மழையோடு மழையாய் மறைந்தனவா அவை? எப்போதும் என்னறையின் ஜன்னலின் பின் அடையும் அவை காணோம். அறை ஜன்னல் திறந்து பார்க்கலாம். ஆனால், எப்படி அறை ஜன்னல் மறைத்துப் பொழியும் நீர் ஜன்னலைத் திறப்பது? மழை ஓய்ந்தால் நீர் ஜன்னல் திறக்கலாம். மழை ஓயத் திறக்க நீர் ஜன்னல் காணோம். எப்போதும் திறக்காத என் அறை ஜன்னலை இப்போது திறந்து காத்திருப்பேன்- புறாக்களுக்காக. திரும்பி வந்த […]

இன்னொரு புகைப்படம்

This entry is part 2 of 13 in the series 10 ஜனவரி 2021

கு.அழகர்சாமி அறிந்தவர் இல்லின் கூடத்தில் மாட்டப்பட்டிருக்கும் அநேக புகைப்படங்கள். அநேக புகைப்படங்களில் தெரியும் அநேக உருவங்கள். அநேக உருவங்களின் நெரிசலில் ஓருருவத்தைத் தேடி- தேடி இல்லாது- இல்லாததால் அறிதலில்லையென்றில்லை என்ற அறிதலில் ஆசுவாசமாகி- அநேக புகைப்படங்களின் மத்தியில் இன்னொரு புகைப்படமானேன் நிச்சிந்தையில் நான். கு.அழகர்சாமி

வற்றும் கடல்

This entry is part 3 of 12 in the series 4 அக்டோபர் 2020

கு.அழகர்சாமி ஆர்ப்பரிக்கிறது அது- ஆச்சரியத்தில் ததும்பும் குழந்தையின்  விழிகளில் தளும்பி வழிகிறது அது. அலையலையாய்க்  குழறுகிறது. அதே போல் குழறுகிறது குழந்தையும். என்ன  அது? விடாது வினவுகிறார் தந்தை. உணர்ந்த குழந்தை உச்சரிக்காது திகைக்கிறது. ’கடல்’- கற்பிக்கிறார் தந்தை. வார்த்தை கற்ற குழந்தையின் விழிகளில் வற்றுகிறது கடல். கு.அழகர்சாமி