ஆட்டுவிக்கும் மனம்

மண்ணில்  மீண்டும் முளைக்க  புதைத்த பற்கள்

விண்ணில் மிளிரும்  வின்மின்களாய்  ஒளிருது

உன்னிடம் கதையாய்  சொன்ன என்மனம்

மண்ணில் உன்னை புதைத்து விட்டு

விண்ணில் தேட அறிவு  மறுக்குது

இன்பங்கள்  கனமாகின்றன

துன்பங்கள் எளிதாகின்றன

ஏழு வயதில்  மறைந்த பெண்ணை

இருபது வயதில்   வரைய வண்ணமில்லை

தடைபட்ட கனவுகள்

எப்படி தொடர்ந்திருக்கும்

ஊகிக்க  வழிதெரியாமல்

திண்டாடும்  மன ஆடுகள்

திண்டாட்டம் கடை நாளில்தான்

தீருமென தெரிந்தும்

வயற்றில்  உள்ள கனத்தை

நினைவில் அசை போடும்

ஆட்டு விக்கும் மனம்

 

 

ve.pitchumani

Series Navigationதி ஜானகிராமனின் அம்மா வந்தாள்பறவைகளை வரைந்து பார்த்த ஒரு கார்ட்டூன் சித்திரக்காரன்