(கட்டுரை -6) (ஜூன் மாதம் 8, 2011) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய முறைப்பாடு அணுமின் நிலையங்களை 2025 ஆண்டுக்குள் கட்டப் போகும் திட்டத்தை இன்று அறிவித்துள்ளது. அவை தேர்ந்தெடுக்கப்படும் எட்டுத் தளங்களில் நிறுவப்படும். அதை அறிவித்த பிரிட்டிஷ் அமைச்சர் : எரிசக்தி மந்திரி சார்லஸ் ஹென்றி. எதிர்கால அணுமின் நிலையத் திட்டங்களுதுக்கு நிதி ஒதுக்கு 160 பில்லியன் டாலர். BBC News (June 23, 2011) ஈரோப்பியன் கூட்டுறவு […]
பி கே சிவகுமார் எழுதியிருந்த பத்திக்குப் பின்னால் தான் ஜெயமோகனை நான் படித்தேன். முதலாவதாக எல்லா நிகழ்வுகள் பற்றியும் எல்லோரும் அல்லது ஜெயமோகன் போன்றவர்கள் கருத்துச் சொல்லியே ஆக வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒரு அபத்தம். இரண்டாவது கனிமொழி வீழ்ச்சியைத் தொடர்ந்து கருத்துச் சொல்ல விரும்பாத ஒருவர், சின்னக் குத்தூசியின் மரணத்திற்குப் பிறகு அவரை ஏன் விமர்சனம் செய்தார் என்ற கேள்வி எழுப்புவது – ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது என்று எனக்குத் தோன்றவில்லை. சின்னக் குத்தூசியைப் பற்றி […]
இதுநாள் வரை பிரிந்திராத மரக்கிளை விட்டு கிளம்புகிறது பழுத்த இலை ஒன்று ….. முடிந்துவிட்ட ஆயுள் எண்ணி பெருமூச்சொன்றை பிரித்தபடி தொடங்குகிறது அதன் இறுதிப்பயணம் …. விம்மிவெடிக்கும் அதன் துயரங்கள் யார் காதிலும் கேட்டிருக்க வாய்ப்பில்லை …. இலையை பிரிந்த சோகம் தாளாமல் சுழன்று சுழன்று மரக்கிளை வைக்கும் ஒப்பாரியை கவனிக்க யாருக்கும் இங்கே விருப்பமில்லை ….. இலையொன்று போனால் துளிர் ஒன்று முளைக்கும் என்கிற சமாதானத்தையும் மரக்கிளை ஏற்ப்பதாயில்லை . இதோ ! அழுதபடி ஓடும் […]
சமஸ்கிருதம் 41 இந்த வாரம் अद्यतन (adyatana) இன்றைய, श्वस्तन (śvastana) நாளைய , ह्यस्तन (hyastana)நேற்றைய ஆகிய வார்த்தைகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். ஏற்கனவே படித்த अद्य (adya) இன்று , श्वः(śvaḥ) நாளை , ह्यः (hyaḥ) நேற்று ஆகியவற்றைப் உபயோகித்து எளிதான வாக்கியங்களை அமைத்துப் பேசிப் பழகவும். இனி கீழேயுள்ள உரையாடலை உரத்துப் படிப்போமா? एतत् सम्भाषणं पठतु ! (etat sambhāṣaṇaṁ paṭhatu!) இந்த உரையாடலைப் படிக்கவும். […]
இணைந்திருந்த போதும் ஒரு தனிமையின் துயரத்தைத் தருவதாய் இருந்தது அது. புன்னகை முகம் காட்டி ஒரு பெண் திரும்பிச் செல்லும்போது அவள் பின் உடலை ரசிக்கத் துவங்குகிறாய். எதிர்பாராமல் லௌட் ஸ்பீக்கரில் அலறும் பாடலைப் போல நாராசமாயிருக்கிறது அது. இல்லாத பியானோவின் சோகக்கட்டைகளை அமுக்கவேண்டும் என்ற எண்ணம் எழுகிறது என்னுள் உன்னைப் பொறுத்தவரை அது ஒரு பிம்பத்தின் மீதான ரசனை என்னைப் பொறுத்தவரை அது அடுத்த உடலின் மீதான காமம். ஒரு வேட்டையை பிடித்த திருப்தியுடன் உன் […]
(online sale & distribution of food & drugs and related problems) — கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளது இணையங்களின் மூலம் வர்த்தகமாகும். இது பல தொழில் துறைகளின், வியாபார நிர்வாகங்களின் வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ளது எனினும், சில பொருட்களை, குறிப்பாக மருந்து பொருட்கள், உணவு பொருட்கள் ஆகியவற்றை இணையத்தின் மூலம் விற்பனை செய்வதிலும், வாங்குவதிலும், பல சிக்கல்களும், பிரச்சனைகளும் அதிகரித்துள்ளன. ஒன்று பொருட்களின் தரம் : இணைய வர்த்தகங்களின் மூலம் பொருட்களின் […]
* கை நீளுதலை யாசகம் என்கிறாய் யாசித்து பெறுவதாக இருப்பதில்லை எனக்கு தேவையான பார்வை பேசாதிருத்தல் அமைதி என்கிறாய் பேசி அடைவதாக இருந்ததில்லை நான் பெற்ற மௌனம் மரணித்தல் வரம் என்பாய் எதன் பொருட்டு தவம் இருந்தேனோ அதிலில்லை யாசகமோ ஒரு மௌனமோ குறைந்தபட்சம் ஒரு பார்வையோ ***** –இளங்கோ
– கவிஞர் முல்லை முஸ்ரிபா, இலங்கை கவிதை பொங்கிப் பிரவாகிக்கும் அற்புதம்; அந்த அற்புதத்தைப் பருகத் தொடங்குகையில் மனசில் குதூகலிப்பு மீளப் பொங்குதல் தொடங்கும். அந்தப் பொங்குதல் இன்பமாக அல்லது இன்பத்தின் வலியாக அல்லது துன்பமாகக் கூட தொடரலாம். கவிதை எனும் தொன்மையூற்று தொட்டணைத்து அகலப் பரந்தூறி விரிகையில் அதன் ஈரத்தில் ஊறாமல் யாரிருத்தல் முடியும். அத்தகைய ஈரத்தில் ஊறியபடிதான் கவிதை வாசித்தல் அல்லது நேசித்தல் வரலாறு இருந்து வந்துள்ளது. அத்தகைய வாசிப்புக்கு ஊடு […]
சுற்றி வரும் சக்கரத்தின் மையப்புள்ளியில் வீற்றிருக்கிறேன் நான் சற்றுப் பதமாகவும் கொஞ்சம் இருகலாகவும் எந்த உருவமுமற்றதோர் நிலையில் ஏகாந்தம் துணையாய்க் கொண்டு சற்றுப் பொறுத்து வந்த ஓர் முழு வட்ட சுழற்சியில் மெல்ல நிலை பிறழா வண்ணம் எழுந்து ஓரமாய்ச் சாய்கிறேன்.. அருகிலேயே வளைந்து நெளிந்து சற்றே அகன்றபடி சாய்மானமாக … வியாபித்தே இருக்கிறேன் கொஞ்சம் பொறுத்தே அப்புறப்படுத்தப்பட்ட அப் பாண்டத்தின் எங்கோவோர் மூலையில் “நான்” கரைந்தோ… இல்லை முற்றிலுமோ … …. முற்றிலுமாக அழித்து போவேனா […]
புத்தக அலமாரி ஒரு தடவை ‘ காலச்சுவடு ‘ இதழில் வெளி வந்திருந்த ” நான் பார்க்காத முதல் குடியரசு தின விழா ” என்கிற கட்டுரைத் தலைப்பே வம்புக்கு இழுத்துப் படிக்கத் தூண்டிற்று.கட்டுரை நெடுகத் தளும்பிக் குதித்த நகைச்சுவையும், இசை பற்றிக் குறிப்பிடுகையில் காணப்பட்ட உணர்ச்சி வசப்படலும் என்னைக் கவர்ந்தன. கட்டுரை எழுதியவரின் பெயர் பாரதி மணி என்று குறிப்பிடப் பட்டிருந்தது. சமீபத்தில் ஒரு புத்தகக் கண்காட்சியில் ” பல நேரங்களில் பல மனிதர்கள் ” […]