ஆதலால் காதல்செய்வோம்…

செ.புனிதஜோதி

 

காதல்கவிதைஎழுத

கொஞ்சம் காதலும் தேவைப்படுகிறது…

 

எழுத்துக்கள் மோகத்

தறியில் நெய்யப்படக்

காதல் அவசியமானதாகத்தான்

உள்ளது…

 

சோம்பலான மூளையை

சுறுசுறுப்பாக்க

சோமபானமாய் காதல்

அவசியமானதாகத்தான்

உள்ளது…

 

சிறைப்பட்ட இதயவாசலில்

பட்டாம்பூச்சி பறக்க

காதல் அவசியமானதாகத்தான்

உள்ளது…

எழுதுகோலோடு விரல்கள்

காதல் செய்யவும்

காகிதத்தோடு எழுத்துகள்

காதல் செய்யவும்

குறைந்தபட்ச

காதலாவது அவசியமாகத்தான்

உள்ளது…

 

பிரபஞ்சம் மலர

எவ்வளவு காதல் தேவைப்பட்டிருக்கும்?

நீயும்

நானும் பிரபஞ்சத்தின்

அங்கம் தானே…

காதல் சிறைப்பிடிக்காமல்

என்னசெய்யும்…

 

 பூர்வகுடிகள்

தின்று துப்பிய

ஆப்பிளின் விதையில்

காதல் எட்டிப்பார்கிறது பார்.

-=-

செ.புனிதஜோதி

சென்னை

Series Navigationமோதிடும் விரல்கள்