ஆத்துல இன்னும் தண்ணி வரல….

 

 

அப்பத்தாவுக்கு உள்ளூர் வைத்தியர்

வைச்ச கெடு,

‘அமாவாசை தாண்டுறது கஷ்டம்’.

கண்ணும் தெரியல

காதும் கேட்கல

பேச்சும் கொளறுது

முனகல் மட்டுமே

வலிக்கூறு தாங்காம.

ஏறி இறங்குற நெஞ்சு

எப்ப வேணா நிக்கலாம்.

கண்ணும், உடம்பும்,

கையும் கெடந்து துடிக்குது

எதுக்குன்னு தெரியல.

அப்பாவுக்கோ ஆயிரம் கவல.

ஆத்துல இன்னும்

தண்ணி வரல !

சோத்துக்கு ஒரு

வழியும் பொறக்கல !

ஆனாலும் ஆத்தா துடிக்கறது

அத விட சோகமில்ல.

கண்ணு கலங்கி நின்னு

அப்பா கேட்டாரு,

“என்னாத்தா வேணும் ஒனக்கு”

பதிலுக்கு அப்பத்தா கேக்குது,

“இன்னும் குறுவை நடலியா” ன்னு!

 ***********

 

 

தி. ந. இளங்கோவன்

Series Navigationகங்கை சொம்புதாகூரின் கீதப் பாமாலை – 27 புயல் அடிப்பு