இடைவெளிகள் (8) – கருத்துப் பறிமாறலும் கவனமான பரிசீலிப்பும்

This entry is part 39 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

இராம. வயிரவன் (11-Aug-2012)   நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இடைவெளிகளைத் தொடர்வது சந்தோசமாகத்தான் இருக்கிறது. தங்கமீன் இணைய இதழில் ஏழு மாதங்கள் இடைவெளிகள் கட்டுரைத்தொடர் வெளிவந்தது. அதன்பிறகு சில இடைவெளிகளால் இடைவெளித் தொடர் நின்றுபோனது. இப்போது மீண்டும் தொடர்கிறேன். முந்தய  கட்டுரைகளைப் படிக்க விரும்புவோர் தங்கமீன் இணைய இதழைப் புரட்டுங்கள். கடந்த இதழ்களில் என் கட்டுரைகளைக் காணலாம். முகவரி இதோ: http://thangameen.com/ அங்கே சென்று படிக்கமுடியாதவர்கள், கவலை வேண்டாம் என்னோடு தொடருங்கள். நானே சுருக்கமாக உங்களுக்குச் […]

பெரியம்மா

This entry is part 38 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

ரிஷ்வன் ஏதோ பொத்தென்று என் மேல் விழ போர்வையை விலக்கி என்னவென்று  பார்த்தேன்… அணில் ஒன்று ‘கீச் கீச்’ என்ற சத்தத்தோடு ஜன்னல்  திரையை  விலக்கி வந்த வழியே ஓடியது என் கண்ணில் பட்டது…  என் போர்வையிலோ பாதி தின்ற கொய்யாப் பழம் விழுந்து  கிடந்தது…  என்ன  நடந்தது  என்று  என்னால்  ஓரளவு  ஊகிக்க  முடிந்தது… ஜன்னலோடு  ஒட்டிய  வேப்ப மரத்திலிருந்து  அணில்  உள்ளே  நுழைய  அந்த நேரம் பார்த்து காற்று  பலமாய்  அடித்திருக்க வேண்டும்…  காற்றிலே […]

படைப்பாளி ‘பழமனு’க்கு ஒரு விமர்சனக் கடிதம் (‘கள்ளிக்கென்ன வேலி’ நாவல் குறித்து)

This entry is part 37 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

(‘கள்ளிக்கென்ன வேலி’ நாவல் குறித்து) – வே.சபாநாயகம். திரு.பழமன் அவர்களுக்கு, 2008ல் ‘இலக்கிய பீடம்’ பரிசு பெற்ற உங்களது ‘கள்ளிக்கென்ன வேலி’ நாவல் படித்தேன். கொங்கு நாட்டுப் பின்னணியில் நாவல்கள் எழுதிய திரு. ஆர்.சண்முகசுந்தரம் அவர்களுக்குப் பிறகு, அப்பகுதி கிராமத்து மக்களின் வாழ்க்கையை அசலாகவும் எளிய நடையிலும் பதிவு செய்திருப்பது நீங்கள்தான் என நினைக்கிறேன். போட்டிப் பரிசுக்கான நவீன நாவல் உக்திகள், சாமர்த்தியம் காட்டும் சொல் சிலம்பங்கள், திடீர்த் திருப்பங்கள், வாசகனை மிரட்டும் கற்பனைப் புனைவுகள் ஏதுமின்றி […]

பழமொழிகளில் ‘வெட்கம்’

This entry is part 36 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com உணர்ச்சிகளில் மிகவும் நுட்பமானதும் குறிப்பிடத் தகுந்ததுமாகவும் விளங்குவது வெட்கம் என்ற உணர்ச்சியாகும். செய்யத் தகாத செயல்களைச் செய்ய நேரிடுகின்றபோதோ பிறர் செய்கின்ற போதோ அவ்வாறு செய்பவர்களைப் பார்த்து, ‘‘உனக்கு வெட்கமில்லை’’ என்றோ, ‘‘நான் இதுக்காக வெட்கப்படுகிறேன்’’ என்றோ கூறுகின்றனர். வெட்கம் என்றால் என்ன? பழிபாவங்களுக்கு நாணுதலே வெட்கமுறுதல் எனும் உணர்வாகும். ஆனால் பெண்களுக்கே உரிய வெட்கம் என்பது போன்றதே என்றாலும் இதிலிருந்து சற்று வேறுபட்டதாக அமைந்துள்ளது. தலைவனும் தலைவியும் […]

கருணைத் தெய்வம் குவான் யின்

This entry is part 35 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

சித்ரா சிவகுமார் ஹாங்காங் ஏழாம் நூற்றாண்டில், சீனாவின் சூ மாநிலத்தை மிகவும் திறமை வாய்ந்த அரசர் மியாவ் சுயன் ஆண்டு வந்தார். அவரது ஆணையை எவரும் எதிர்த்தவர் இல்லை.  யாரேனும் ஆணைப்படி நடக்கவில்லையென்றால், கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர், குடும்பத்தினர் உட்பட! அரசர் மியாவிற்கு, அழகான மூன்று மகள்கள் இருந்தனர். மூத்தவள் மியாவ் யின். இரண்டாமவள் மியாவ் யான். இளையவள் மியாவ் ஷான். இளையவள் பிறந்த உடன், அவளைக் கண்ட அரசருக்கு, அவளது முகம் பரிசுத்தமாகவும் கருணை மிக்கும் காணப்பட்டதாக […]

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 39

This entry is part 34 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

– நாகரத்தினம் கிருஷ்ணா ஹரிணி     47.       வேணுகோபாலை கைத்தொலைபேசியில் பிடித்தேன். நாளை செஞ்சி வருகிறேன் வீட்டில் இருப்பாயா என்றேன். சென்னைக்கு போக வேண்டியிருப்பதாகவும் மாலை நான்கு மணிக்குத் திரும்பிவிடுவதாகவும் உறுதியளித்தான். படித்துமுடித்த செஞ்சி நாவலைக்குறித்து சில சந்தேகங்கள் இருந்தன. உண்மையின் விழுக்காடுகள் எவ்வளவு என தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது.  சடகோபன் பிள்ளையுடன் விவாதிக்கவேண்டும். முடிந்தால், செஞ்சியின் காவலரண்கள் குறித்து ஆய்வுசெய்த ழான் தெலொஷையும் பிள்ளையையும் சந்திக்க ஏற்பாடு செய்யவேண்டும். கையெழுத்துப்பிரதியை நூல்வடிவில் கொண்டுவரவேண்டுமென்ற […]

மலட்டுக் கவி

This entry is part 33 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

   —  ரமணி   ஒரு மிருகத்தை வேட்டையாடுவது போல அடம்பிடிக்கும் குழந்தைக்குச் சோறூட்டுவது போல வயதானவர்களின் பிடிவாதம் தளர்த்துமாப் போல பரீட்சை நாளின் முன்னிரவு போல எண்ணங்களுக்கு வடிவு கொடுப்பதும் ஆகிவிடுகிறது. எங்கேயோ புதர்களுக்குள் பதுங்கிவிடும் வாயில் திணித்ததை என்மேலேயே துப்பிவிடும் முதுகில் ஏற்றிக்கொண்ட காலத்தால் சண்டையிடும் ஓட்டைத் தொட்டியில் தங்காது தப்பிவிடும் நால்வகைப் போக்கில் உருக்கொள்ளாது எத்தனை முறை தரிக்காது போயிருக்கிறது?

பூங்காவனம் ஒன்பதாவது இதழ் மீது ஒரு பார்வை

This entry is part 32 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

பூங்காவனம் ஒன்பதாவது இதழ் மீது ஒரு பார்வை எம்.எம். மன்ஸுர் – மாவனல்லை பூங்காவனத்தின் 09ஆவது நுழைவாயிலால் உள்ளே நுழைந்தால் உங்களுடன் ஒரு நிமிடம் எனும் பக்கத்தில் மனித இனத்தின் அறிவு முன்னேற்றத்தின் பிரதிபலனாக விளங்கும் கணினி, கைத்தொலைபேசி, தொலைக்காட்சி என்பன மனிதனுக்கு அன்றாடத் தேவைகளாகிவிட்ட அத்தியாவசியப் பொருட்களாகிவிட்டாலும், அதன் அடுத்த பக்கம் என்றொரு தீமை பயக்கக்கூடிய ஒரு பக்கமும் உள்ளது என்பதை தெட்டத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது பேஸ்புக்கிலும், மெகா சீரியல்களிலும், தெலைபேசி நீண்டநேர உரையாடல்களிலும் […]

அசோகன் செருவில்லின் “ டிஜிட்டல் ஸ்டூடியோ “

This entry is part 31 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

  சிறகு இரவிச்சந்திரன். பாலியல் கதைகளைத் தாண்டி, எப்போதாவது வணிக இலக்கிய(!) இதழ்களில், நல்ல கதைகள் வரும். அப்படி நான் கண்ணுற்று எழுதியதுதான் சுகுமாரனின் ‘சர்ப்பம் ‘, பிரபஞ்சனின் ‘ மரி என்கிற ஆட்டுக்குட்டி ‘. எந்வொரு எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் நான் நூலகத்திற்குப் போகிறேன். இன்றும் அப்படித்தான் போனேன். ஆனால் அதிர்ஷ்டம் பாருங்கள்! ஒரு நல்ல கதையைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரே ஒரு குறை. கதை தமிழில் என்றாலும், மூலம் மலையாளம். வந்தது உயிர்மை ஜூலை […]

மானுடர்க்கென்று……..

This entry is part 30 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

விஜே.பிரேமலதா   கறுத்துப் போன தேகத்தோடு, வியர்வை வழிய நெற்றியிலிருந்த நாமம் வழிந்து மூக்கைச் சிவப்பாக்கியிருந்தது. அதை அறியாமல், ஒருவித தளர்வோடு முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார் பெரியாழ்வார். கூடத்துத் திண்ணையில் தோழியரோடு மாலை கட்டியபடி அனுமன் பற்றிய கதையைச் சொல்லிக்கொண்டிருந்த கோதை தலைநிமிர்ந்தாள். ஆண்டாளின் கதை நின்றதை அறிந்த தோழியர் பெரியாழ்வாரின் முகத்தைப் பார்த்தளவில் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு வாய்ப் பொத்தி அவரவர் வீட்டிற்குப் பறந்து போயினர்.   தந்தையின் வருகை அகத்தில் மகிழ்ச்சியைத்தர, துள்ளிக்குதித்தபடி அன்றலர்ந்த […]