ஆன்மாவின் உடைகள்..:_

வெள்ளுடை
தேவதைகளையும்
செவ்வுடை
சாமிகளையும்
மஞ்சளுடை
மாட்சிமைகளையும்
பச்சை உடை
பகைமைகளையும்

படிமங்களாய்ப்
புதைத்தவற்றை
வர்ணாசிர தர்மமாய்
வெளியேற்றும்
ப்ரயத்னத்தில்..
ப்ரக்ஞையோடு
போராடித்
தோற்கிறேன்..

விளையாட்டையும்
வினையாக்கி
வெடி வெடித்துத்
தீர்க்கிறேன்..
எப்போது உணர்வேன்
வண்ணங்களை..,
அழுக்கேறாத
ஆன்மாவின் உடைகளாய்..

Series Navigationபாராட்டுவதற்கு ஏதுமற்றவரா கருணாநிதி?எனது இலக்கிய அனுபவங்கள் – 5 விமர்சனமும் எதிர் வினையும்