ஆரோகணம் & பிட்சா – டிஜிடல் தமிழ் சினிமா புரட்சியின் மைல்கல்கள்

Spread the love

இந்த மாதம் தமிழ் சினிமாவிற்கு “நல்ல காலம் பொறக்குது” என்று கூவிய காலம்.
இன்று, இணையம் விசாலமான அறிவு அலசல் பாதையைத் திறந்து விட்டிருக்கிறது.
சொல்லப் போனால், ஃபிலிம் கொண்டு பதிவு செய்யப்படும் சினிமாக்களின் பளிச்சான இயற்கைக்கு முரணான பதிவு போல் இல்லாமல் டிஜிடலில் உள்ளது உள்ளபடி பதிவு கிடைக்கிறது.
சினிமா திரையரங்குகள் அவ்வளவு தான் என்ற போது சத்யம் சினிமா தனது திரையரங்கு முறையை மாற்றி அமைத்து தொழிற்நுட்ப முன்னேற்றத்துடன் தன்னை இணைத்துக் கொண்டது. வெற்றி பெற்றது.
நீதிக்கு தலை வணங்கு, பைலட் பிரேம்நாத் என்று நம்மை தமிழ் சினிமா மிரட்டிய காலகட்டத்தில், அந்தாஸ், ஆக் கலே லக் ஜா என்று நாம் இந்தியிடம் சரணடைந்தோம்.
அப்போது வந்த 16 வயதினிலே தமிழ் சினிமாவை மீட்டுக் கொடுத்தது…
அதே சூழலில் இன்று தமிழ் சினிமா…
ஐ ஆம் சாம் , டோட்ஸி, என்று தமிழில் படுத்தி எடுத்த போதும், தாண்டவம், மாற்றான் என்று நம்மை பயமுறுத்திய போது,
இரு சினிமாக்களும், ஒரு சினிமா ஒர்க்‌ஷாப்பும் சென்னையில் மையம் கொண்டு தமிழ் சினிமாவை மீட்டுக் கொடுக்கிறது.
ஒர்க்‌ஷாப்: கமல் முன்னெடுத்துச் செல்ல FICCI-FRAMES.com  சென்னையில், திரைக்கதை ஒர்க்‌ஷாப் மற்றும் திரைத்தொழில் , டிஜிடல் புரட்சியென செமினார், ஒர்க்‌ஷாப்புகள் , தரமுடன்.
என்ன, உங்கள் மொழியில் சிந்தியுங்கள்… உங்கள் மொழி சார்ந்த விடயங்களை பதிவு பண்ணுங்கள் என்று ஆங்கிலத்தில் ஹரிஹரன் வேண்டுகோள் விடுத்தார். 
மற்றபடி அது ஒரு அருமையான கலந்துரையாடல் சம்பவம்.
தவிர, இரு சினிமாக்கள், நம்பிக்கையை ஏற்படுத்தின…
“பிட்சா” – கதை சொல்லும் முறையிலும், காட்சி உருவாக்கம், முன் பின் நேர்கோடின்றி கதை சொல்லும் யுக்தி, எதிர்பாராத டிவிஸ்டுகள் என்று அதிரடிக்கிறது.
FICCI  செமினாரில் கமல் சொன்னார், “ நாம் இருப்பது இரண்டு எஸ் எம் எஸ் களுக்கிடையே இருக்கும் பார்வையாளனை இழுத்து தொடர்ந்து பார்க்க வைக்க வேண்டிய காலகட்டம் என்று.
அதனால் தானோ, “இன்செப்ஷன்” போன்ற படங்கள் கோர்வையின்றி அங்குமிங்குமாக அலைபாயும் திரைக்கதை சொல்லும் அமைப்பை உருவாக்கியது என்று…
அதே பாணியில் தான் பிட்சா, ஆரோகணம் இரண்டும்.
இரண்டும் பார்வையாளனை இழுத்துப் போட்டு,
ஒன்று ரோலர் கோஸ்டர் மாதிரி பயணம்,
மற்றொன்று (ஆரோகணம்) அப்படி இப்படி ஆடினாலும் தொட்டில் தாலாட்டும் விதம்.
பிட்சா: அந்தக் காலத்தில் ”அதே கண்கள்” படம் முடிந்தவுடன் “இப்படத்தின் முடிவை வெளி சொல்ல வேண்டாம்” என்று ஒரு ஸ்லைடு போடுவார்கள்.
அப்படி ஒரு ஸ்லெடு போடாமலேயே, கதையின் டிவிஸ்டை அடுத்தவரிடம் சொல்லக் கூடாது என்ற மனநிலையுடன் நம்மை சந்தோஷித்து வெளிவரச் செய்த படம்.
ஆரோகணம்: நம்மில் பலருக்கும் பை போலார் டிஸ் ஆர்டர் பல தள நிலைகளில் இருக்கும்.
இந்த மாதிரி மனநிலை பிறழ் குணாதிசியங்கள், முகத்தை அஷ்டகோணல் ஆக்கி, அவார்ட் கிடைக்குமுடா என்று நடிகனை பார்த்து சொல்ல வைத்தது தாண்டி எதுவும் செய்ததில்லை.
ஆனால், ஆரோகணம் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
வியாக்கியான வசனங்கள் இன்றி தொடர் காட்சியமைப்புகள்.
மனம் கனத்துப் போகிறது.
இயக்குனர் எல்லைக் கோட்டை சரியாக நிர்ணயித்து நடந்துள்ளார்.
என்ன யதார்த்தம் என்ற பெயரில் ஆரம்பித்தில் வரும் ஆங்கில வசனங்கள் தமிழில் சொல்லப்பட்டிருக்கலாம்.
கதை சொல்லும் முறையில் பிட்சா, ஆரோகணம் ஒன்று எனினும் களம் வேறு.
தமிழ்திரையுலகு ஸ்திரமாக இருக்க, FICCI-FRAMES ,  பிட்சா, ஆரோகணம் ஒரு முக்கோண தாங்கியாக வந்துள்ளது.
அதிலும், ஆரோகணம் படத்திற்கு இந்திய அரசின் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த இயக்கம் விருது தரப்பட வேண்டும்.
லாபியிங் தாண்டி இப்படம் அதைச் சாதிக்கும்.
கடைசி ஐந்து நிமிடம்  அந்த நோய் பற்றி சொல்ல ஆரம்பிக்கும் போது அங்கங்கு உச்சென்றாலும் , பின் யார் யாருக்கு இந்த நிலை இருந்தது என, “ஆப்ரஹாம் லிங்கன்” மார்க் ட்வயின், வான் கோ, என்று காண்பிக்க்கப்படும் போது எழுந்தவர் அமர்ந்தனர் – நான் உட்பட.
வெளியே வரும் போது யாராவது இந்தபடத்தில் வேலை செய்தவர் இருந்தால் பாராட்டலாம் எனத் தோன்றியது.
நிச்சயம் பிட்சா, ஆரோகணம் படங்களைப் பாருங்கள்.
ஆரோகணம் படம் ரூ 35 லட்சத்தில் கேனான் 5 டி யில் எடுக்கப்பட்டதாம்.
இனி, பல கதை எழுதுவது மாதிரி, எல்லோரும் சினிமா எடுக்கலாம். அதை டிஜிடல் சினிமா சாதிக்கிறது. அசட்டு கமர்ஷியல் என்றில்லாமல் நல்ல நல்ல புதினங்கள், அனுபவங்கள் இனி சினிமாவாக வரும்.
அதை ஆரோகணம் பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்துள்ளது. இனி எல்லாம் ஜெயமே…
35லட்ச ரூபாய் சினிமா என்பதால், தியேட்டரில் ரூ.95 டிக்கெட். இன்னும் குறைவாக நிர்ணயித்திருக்கலாம்.
தமிழக முதல்வர் செல்வி.ஜெ அவர்களுக்கு ஒரு விண்ணப்பம். ஆரோகணம் படத்திற்கு வரிவிலக்கு தர வேண்டும்.
டிஜிடல் சினிமா எடுக்க ஆசையுள்ளவர்கள், தகவல்கள் ஏதாவது வேண்டின் கீழேயுள்ள மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
கோவிந்த் கருப்
Govindkarup@govindkarup.com

Series Navigationவைதேஹி காத்திருந்தாள்தானாய் நிரம்பும் கிணற்றடி ..அய்யப்பமாதவனின் சிறுகதைத் தொகுதி எனது பார்வையில்