ஆளற்ற பாலம் – கொண்டபல்லி கோடேஸ்வரம்மா – நூல் வெளியீடு

ஆளற்ற பாலம் – கொண்டபல்லி கோடேஸ்வரம்மா
தெலுங்கிலிருந்து தமிழில் – கௌரி கிருபானந்தன்
அட்டை ஓவியம் : ரோஹிணி மணி

இயக்கங்களின் வரலாறு பொதுமக்கள் பரப்பிற்குள் கட்டமைக்கப்படுகிறது. கட்டமைக்கப்பட்ட வரலாற்றில் அடங்கும் மனிதர்கள், இயக்கங்களை வழிநடத்துகிறார்கள். அவ்வாறான பெண்ணின் கதை இது. கொண்டபல்லி கோடேஸ்வரம்மா என்ற ஒரு பெண்மணியின் சுயசரிதை மட்டுமல்ல. பொதுவுடைமைக் கட்சியில் ஒரு கால நிகழ்வை, வலிய மனிதர்களின் நடப்புகளுக்குச் சாட்சி கூறும் நூல் இது. காலப்பெண்ணின் வாழ்வு இந்தத் தன்வரலாற்றில் பொதிந்து கிடக்கிறது.
கொண்டபல்லி கோடேஸ்வரம்மா தன் அரசியல் பயணத்தின் தோழமையாக இலக்கியத்தையும் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார். அவ்வாறே பாடல்களும் வீதி நாடகங்களும் அவரோடு சேர்ந்துகொண்டன. கனவுகள், அதிகாரத் துரத்தல்களின் பின்னணியில் கோடேஸ்வரம்மா தலைமறைவு வாழ்வு, காதல், உறவுகள், பெண் இயக்கங்கள், சங்கங்கள், போராட்டங்களை விவரிக்கிறார். மக்கள் பரப்பில் சமத்துவத்தையும் மறுமலர்ச்சியையும் உண்டாக்க உழைத்தவர்களின் தடங்கள்தான் இந்நூல்.
பெண்களும் தலித்துகளும் தொழிலாளர்களும் ஒடுக்கப்படுகிற காலத்தில், மீட்சிக்காய்ப் போராடிய இயக்கத்தின் வரலாறு இது.

ஜூலை 30th அன்று ஈரோட் ல் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் எடுத்த புகைப்படங்கள்
kondapalli

Series Navigationஅமாவாசைபுரட்சிக்கவி – ஒரு பார்வை