ஆழி …..

அருணா சுப்ரமணியன்

கண்ணாடி தொட்டி மீன்கள் 

கடலுக்குள் விடப்பட்டன..

கடலின் நீள ஆழம் கற்று 

சுறாக்கள் வாயில் சிக்காமல் 

திமிங்கலங்கள் தின்று விடாமல் 

தன்னைத்  தானே காத்து 

நிமிர்வுடன் நீந்த தொடங்கின…

கடல் வாழ் மீன்கள் 

தங்களுக்கான தண்ணீரை 

தேவையற்று தருவதாய் 

புலம்பத் தொடங்குகின்றன..

கடலில்  வசிக்க ஆற்றலை 

வளர்த்து  வெற்றி கண்ட

மீன்கள் மீண்டும் 

கண்ணாடி தொட்டிக்குள் 

அடைய மறுக்கின்றன…

இவ்வாறாய்

ஒரு சூழல் 

சுழல்காற்றாய் 

சூறையாடுகிறது 

அமைதியான ஆழியை…

– அருணா சுப்ரமணியன்
Series Navigationஅழகுகவிதைகள்