இதுவரை சமர்பிக்கப்பட்டவை

பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி
களவு செய்
கன்னியின் கற்பை
களங்கம் செய்;
மன்னிப்போமா தெரியவில்லை
மறந்துவிடுவோம்
கண்டிப்பாக!
ஊழல் செய்
உதிரி பாகம் தயாரித்தல் தொடங்கி
உலக விளையாட்டு வரை;
கவலை இல்லை
கவனிக்க நேரமில்லை!
இனத்தை
அழித்தவனை
அழை
புன்னகைத்து
புண்ணியதலம்
தனை திறக்க!
ஒவ்வொருமுறை
உயிர் துறந்த
எல்லைவீரனை
பற்றி எவனும்
கேட்பதில்லை
எதுவும்
நடப்பதுமில்லை!
சட்டரீதியாக அணுகப்படும்.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம்.
சுமுகமான முடிவு எட்டுவோம்.
விசாரணை நடந்து கொண்டே இருக்கும்
அறிக்கைகள் சமர்பிக்கப்படும்!
இவ்வளவு தான்
இவ்வளவே தான்
மக்களே
ஜனநாயக
நியாயம்..