இனியாவது சிந்திப்போமா?

ரேவதிசோமு

2020 புதுவருடம் பிறந்ததும் உலகில் உள்ள அனைத்து தொழிற்ச்சாலைகளும் மூடப்படும் என்று அவளிடம் யாராவது சொல்லியிருந்தால், அதை அவள் தன்னை கேலிசெய்கிறார்கள் என்றே நினைத்திருப்பாள்.

கிரேட்டா தன்பர்க்  மற்க்கமுடியாத பெயர். அவளது வார்த்தைகளுக்கு மனிதர்கள் யாரும் செவிசாய்க்கவில்லை. ஆனால், உலகம் அவளது குரலைக்கேட்டது. இயற்க்கை அவளது குரலுக்கு மனமிறங்கியது. உலகின் தற்ப்போதயநிலை ! அடடா! காற்று சுத்தமானது! நீர் சுத்தமானது! ஏன், ஓசோன் படலத்தின் ஓட்டை கூட அடைபட்டிருக்கும் இன்னேரம். கழிவுகள் அனைத்தும் தற்க்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

அத்தியாவசிய தேவைக்கும்,  ஆடம்பர தேவைக்கும் வித்தியாசம் தெரிய ஆரம்பித்திருக்கிறது நமது மக்களுக்கு. ஆனால், வியாபாரிகள் யாரும் மாறியதாக தெரியவில்லை. ஊரடங்கு எப்பொழுது முடியும்? நம் தொழிலை எப்பொழுது ஆரம்பிக்கலாம்? என்று காத்துகிடக்கிறார்கள். சிறு தொழிலோ, பெரும் தொழிலோ, நாம் செய்யும் தொழில் உலகுக்கு நன்மையை அதிகம் தருமா? தீமையை அதிகம் தருமா?என்ற கேள்வியை யாரும் யோசிப்பதில்லை! ஏனெனில், ஒவ்வொரு செயலிலும் நன்மையும் இருக்கும், தீமையும் இருக்கும். அதிகம் உள்ளது எது என்று மட்டுமே நாம் சிந்திக்க வேண்டும். ஆனால், அதிக லாபத்தை தருமா? என்ற ஒரே சிந்தனை மட்டுமே நமக்கு.

ஓ! பெரும் வியாபாரியே! நீ சம்பாதிப்பது உனது வாழ்விற்க்காக! நீ சம்பாதிக்கும் ஒவ்வொரு பணமும் உனது வருங்கால சந்ததியினரின் கழுத்தை சுருக்கும் முடிச்சுக்கள் ஆகும். பணம் சம்பாதிக்க தேவைதான். அது நமது பிள்ளைகள், நமது சந்ததிகள் நாளை வளமாக வாழ்வதற்க்காகத்தானே? உலகை குப்பை தொட்டியாக மாற்றிவிட்டுப்போனால், அவர்கள் எங்குவாழ்வார்கள்? குப்பை தொட்டிக்குள்ளா?  பெரும் குப்பைத்தொட்டியை செய்துவிட்டு, நீ மட்டும் ஆடம்பர பங்களாவில் வாழலாம் என்று கனவு கானாதே! உனது பங்களா அந்த பெரும் குப்பைத்தொட்டிக்குள் இருக்கும் என்பதை மறவாதே!

அழகு சாதனங்க்கள், தோலில் தயாரிக்கப்படும் கைப்பைகள், ஆடம்பர பொருட்கள் தயாரிக்கப்படும் தொழிற்ச்சாலைகள் மூடியது மூடியபடியே இருந்தால் எவ்வளவு நன்மை நமக்கு! இயற்க்கை நமக்கு ஆனந்தத்தை தரும். ஆடம்பரம் நமக்கு அழிவைதரும் என்பதை இந்த நேரத்திலாவது நாம் உணரவேண்டாமா? சாயப்பட்டரைகளின் கழிவுகளில் ஏற்ப்படும் வேதனைகளை நாம் அனுபவிக்கவில்லையா? ஒரு பீரோவில் குடும்பத்தாரின் துணிகளை அடுக்கி வைத்த நாம், ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு பீரோ ஒதுக்கினாலும்  மிதமிஞ்சி சிதறிக்கிடக்கும் துணிகளை வைக்க இடமின்றி தவிக்கிறோம். தேவையில்லாத பொருட்க்களை வாங்கி குவிக்கும் பழக்கம் நம்க்குள் எப்பொழுது வந்தது? வியாபாரத்தில் போட்டி, உற்ப்பத்தியில் போட்டி, விதவிதமாக, கலர் கலராக வங்கி குவிப்பதிலும் போட்டி, விளைவுகளை அனுபவிக்கும் நேரம் இது. எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்தாக வேண்டும்.

தேவையில்லாத கெமிக்கல்ஃஸ் கம்பனிகளின் கழிவுகளின் விளைவுகளை அனுபவிக்கவில்லையா நாம்?  நதிகளை சாக்கடை ஆக்கினோம் நாம். இயற்கை இத்தருணம் அனைத்தையும் சுத்தமாக்கி தந்திருக்கிறது நமக்கு!  தொழில்களை நான் முடக்க சொல்லவில்லை. மாற்றி அமைக்க வேண்டுகிறேன். அதற்க்கான தருணம் இதுவே! இனியாவது சிந்திப்போமா?

இப்பொழுதும் நாம் விழித்துக்கொள்ள இல்லையாயின்  பெரும் இழப்புக்கள் தொடர்கதையாகிவிடும். ஐநா சபையில் பல அரசுகளும் கூடி இது பற்றி பேசும் தருணம் இதுவே!

இதைவிட்டால் பிறகு பேசுவதற்க்கு மனிதர்க்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே?

நன்றி!  ……..  ரேவதிசோமு…………..பாண்டியில் இருந்து………

Series Navigationகொரோனா சொல்லித் தந்த தமிழ்என்னுடைய நூல்கள் அமேஸான் கிண்டில் பதிப்பாக