இனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 3
- தோற்றக் காலத்தில் பூமியை இரு நிலவுகள் சுற்றி வந்திருக்கலாம் (Earth Once Had Two Moons, Astronomers Theorize) (August 3, 2011)
- கவிதைகள். தேனம்மைலெக்ஷ்மணன்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (காலை இளம் ஒளியில் ரூபி) (கவிதை -43)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி (The Return) (கவிதை -47 பாகம் -4)
- ஸிந்துஜா – முப்பது வருடங்களுக்குப் பிறகு
- நினைவுகளின் சுவட்டில் – (74)
- ஜென் ஒரு புரிதல் பகுதி 6
- தமிழ் ஸ்டுடியோ வழங்கும் ‘லெனின் விருது’ – பெறுபவர்: ஆர்.ஆர். சீனிவாசன்
- ஐ-போன் வியாதி
- வாக்குறுதியின் நகல்..
- நான்(?)
- ஒன்றாய் இலவாய்
- சிறு கவிதைகள்
- ஆதி
- பாசாவின் உறுபங்கம்
- எங்கோ தொலைந்த அவள் . ..
- சொல்வலை வேட்டுவன்
- குவிந்த விரல்களுக்குள் படபடக்கும் சிறுவண்ணாத்தி
- அறப்போராட்டமாம் !
- பூனையின் தோரணை
- கதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -? (தொடர்ச்சி)
- நானும் ஸஃபிய்யாவும்
- காற்றும் நிலவும்
- பொம்மை ஒன்று பாடமறுத்தது
- ஜெயந்தன் & ரங்கம்மாள் விருது பெற்றநாவல் “வெட்டுப்புலி” குறித்த கலந்துரையாடல்.
- வெறுமை
- எனது இலக்கிய அனுபவங்கள் – 11 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 3 (ஆர்வி)
- சகிப்பு
- கூடு
- மறைபொருள் கண்டுணர்வாய்.
- காலம்
- பிரசவ அறை
- தொலைக்காட்சி – ஓர் உருமாற்றம்
- பேசும் படங்கள்
- மகிழ்ச்சிக்கான இரகசியம் இரகசியம் : ரோண்டா பைரன் நூல் தமிழ் மொழிபெயர்ப்பு
- கலித்தொகையின் தலைவி தோழி உரையாடலில் திருமணம்
- புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம்
- பழமொழிகளில் வரவும் செலவும்
- சொல்
- பஞ்சதந்திரம் தொடர் 4 – ஆப்பைப் பிடுங்கிய குரங்கு 2
- இனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 44
வர்ணங்களின் பிரளயம்.
=============================================ருத்ரா
15.8.2011
அந்த வர்ண புகைப்படம் அற்புதம்.
முகங்களா? கொடிகளா?
முகங்கள் கொடிகள் ஆகின!
கொடிகள் முகங்கள் ஆகின.
ஆனாலும் அது
நம் சுதந்திர சுவாசங்களின்
வர்ணப்பிரளயங்கள்.
அந்த முகங்களும்
மூவர்ணங்களும்
வெள்ளமாய் வெள்ளையாய்
திரண்டதால் அதில்
அசிங்கமான நான்கு வர்ணங்கள்
அமிழ்ந்தே போயின.
பிஞ்சுகளே!
பிஞ்சு போவதற்கு நீங்கள்
பிறப்படுக்க வில்லை!
பிரளயங்களின்
கர்ப்பப்பை எங்கிருக்கிறது?
இளைய தலைமுறைகளே
உங்கள் விழிப்பில் தான் இருக்கிறது.
ஊழல்களின்
பேய்ப்புகை மண்டலங்கள்
கவிந்திருக்கும் உன் பூமியில்
நீங்கள் தான் வீரிட்டு எழவேண்டும்.
இளஞ்செல்வங்களே!
வாக்குப்பெட்டிகளைக்
குறிவைக்கும்
வெறும் கூச்சல் குப்பைகளை
அப்புறப்படுத்துங்கள்.
சாதி மத பூதங்கள்
பூச்சாண்டி காட்டும்
ஊடகங்களில்
ஊடுருவியிருக்கும்
நச்சு வேர்களை வெட்டியெறியுங்கள்.
லோக்பால்
வெறும் டினோப்பால் அல்ல
இந்த அழுக்குகளை “வெளுத்துக்”கட்ட.
இந்த ஜனநாயகக்கடலின்
ஒவ்வொரு துளியிலும்
சீறிய சிவப்புக்கணல்
வீசிய வீரத்தியாகத்தின்
சொட்டு நீலங்கள் ஊற்றப்பட்ட
அலை கடல் நம் சுதந்திரம்.
விடியல் விளிம்பு
இன்னும் தட்டுப்படவில்லை தான்.
இளைய சிறகுகளே
இந்த தேடலுக்கு
ஆறிலிருந்து அறுபது வரை என்று
முற்றுப்புள்ளி வைக்கமுடியாது .
அறுபது ஆண்டுகள் தாண்டியும்
இருபதின் புயல் மூச்சு
இன்னும் நம் இதயமெல்லாம்
நிரம்பிய நரம்புக்கூட்டம் தான
நம் சுதந்திர கீதம்.
வழக்கு தொடுத்தாலே
திகார் சிறை தான்.
ஏதோ ஒரு சலவைத்தொழிலாளி
சொன்னாலே போதும்
சீதைகள்
தீக்குளிக்கவேண்டியது தான்
என்றெல்லாம்
ராம ராஜ்ய பஜனை செய்பவர்களே!
பாராளுமன்றத்தை படுக்க வைக்கவே
தினமும்
பாய் தலையணைகளோடு
வருவது போல் நாடகங்கள்
அரங்கேற்றிக்கொண்டிருக்கிறீர்களே!
கர்நாடகத்தில் ஊழலின் ஒரு
துர்நாடகம் நடப்ப்பதைக்கண்டு
கண்ணை மூடிக்கொண்டிருப்பதேன்?
வருடக்கணக்காய்
வழக்கு நடந்த போதும்
நீதிமன்றம் வர
அடம்பிடிக்கும் நிலையில்
நீதி தேவதையின் தராசுத் தட்டுகள்
தள்ளாடிக்கொண்டிருப்பதையும்
தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும்
தர்மசீலர்களே!
அந்த அ”சோக”த்தூணின்
தர்ம சக்கரம் ஒரு
தர்ம சங்கடத்தில் இருப்பதைக்கண்டும்
பாசாங்கு செய்யும் உங்கள்
பாராளுமன்றக்கூத்துகளை
மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
வழக்கை நிரூபித்தால் தான்
(இருக்கவே இருக்கிறது
அடுத்தடுத்து அப்பீல்கள்)
வாபஸ் வாங்குவேன் என்று
சண்டித்தனம் செய்பவர்கள்
தண்டி யாத்திரை செய்த தேசத்
தந்தைகள் போல்
தந்திரம் செய்வது தான்
இன்றைய ஜனநாயகத்தின்
வேதனையான வேடிக்கைகள்.
அதனால் வெறும்
வேடிக்கைக்கு இந்த
வேதனைகளை கபடத்தனமாய்
காட்சிப்படுத்தும் அவலங்களை
அப்புறத்துவோம்.
அந்த உண்ணாவிரதப்போராட்டங்கள்
வாழ்த்தப்பட வேண்டியது தான்!
அதற்கு அடியில்
நம் செங்கோட்டையை
இடித்துத் தள்ள
கடப்பாரைகளும் அங்கே
படுத்துக்கிடக்காமல் இருக்கும் வரை
அந்த உண்ணாவிரதப்போராட்டங்கள்
வாழ்த்தப்பட வேண்டியது தான்!
“ஜெய்ஹிந்த்”!
=================================================ருத்ரா.
அந்த வீடியோ பிரயோஜனமாக இருந்தது. நன்றி.