இன்னும் சில கவிதைகள்

இயல்பு 

தெரியாததைத்

தெரியாது என்று

பெருமையுடன்

சொல்வது

குழந்தை மட்டும்தான்.

வருகை 

வரலாமாவென

அனுமதி கேட்டுக் கொண்டு

கதவைத் திறந்ததும்

உள்ளே வருகிறது

காற்று.

வயது என்னும் கொடுங்கோலன்

இப்போது 

எதையும் அடக்க முடிவதில்லை 

ஒண்ணுக்குப் போவதை 

ரெண்டுக்கு வருவதை 

கடைவாயில் வழியும் எச்சிலை. 

ஆனால் அடங்கிப் போய் விட்டது 

கவிதையில் உருகுவதும் 

கதையில் மயங்குவதும்..  

ஒப்பனைகள்    

அப்பாவின் நிழல்

கலைஞரின் கால்

நெல்வேலிக் கைகள் 

காளானாய் முளைத்த

கள்ளக் குரல்கள்

இவையேதுமில்லா 

எனக்கெப்படிக் கிடைக்கும்

உள்நாட்டு அவார்டும்

வெளிநாட்டு விருதும்?

பாரத நாடு

பழம் பெரும் நாடு

நீரதன் புதல்வர்

என்னும் நினைவை

இன்றே  அகற்றுவீர்.

Series Navigationதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]காலாதீதத்தின் முன்!