இயக்கி

சத்யானந்தன்

அசையாது மேசையில்
ஆசிரியர் பிரம்பில்
அது இருந்தது

அரை நொடியில்
தொட்டுச் செல்லும்
அவள் மான் நோக்கில்

விடுப்பு விண்ணப்பம்
கிடப்பில் இருக்கும்
மேலதிகாரி மேசை
இழுப்பறையில்

அழைப்பைப்
புறந்தள்ளும்
கைபேசிகளில்

இந்த அறையின்
குளிர்சாதன
தொலைவியக்கியில்
இருக்கத் தான்
செய்கிறது

உயிர்துடிப்பு
இல்லாமல்

Series Navigation