வாழ்க்கை ஒரு வானவில் – 6

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

ஜோதிர்லதா கிரிஜா சிந்தனை தேங்கிய விழிகளால் தொலைப்பேசியின் ஒலிவாங்கியை ஏறிட்டபடி அதை வைத்த ராமரத்தினத்தின் மீது ஓட்டல் முதலாளியின் பார்வை ஆழமாய்ப் படிந்தது. “என்னப்பா? ஏதானும் பிரச்சனையா?” ஒரே ஒரு நொடி திகைத்த பிறகு, “எங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம், சார். அதான் என் தம்பிதான் கூப்பிட்டுச் சொன்னான்,” என்று சட்டென்று தோன்றிய பொய்யைச் சொல்லிச் சமாளித்தான். “என்னமோ `சரிங்க, சார்’னு சொன்னே? `சாயங்காலம் ஓட்டலை விட்டுக் கெளம்பினதும் நேரே உங்க வீட்டுக்கு வர்றேன்’னு வேற சொன்னே?” என்று […]

முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 7

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 7 மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ் படங்கள் : 25, 26, 27, 28.​ ​இணைக்கப்பட்டுள்ளன. ​+++++++++++++++​

கவிதைகள் – ஸ்வரூப் மணிகண்டன்

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

ஸ்வரூப் மணிகண்டன் வார்த்தைகள் மட்டும் கொண்டிருந்தவனிடம் வசிக்க இடம் கேட்டு வந்தாய். இருக்கும் வார்த்தைகளை வெளியனுப்பி விட்டு உன்னை உள்ளிருக்க வைத்தேன். உள்ளிருக்கும் உன்னை பார்த்து விடும் முனைப்பில் எட்டிப்பார்க்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றாய் உன் புன்னகைக்குள் விழூந்து மறைவதை பார்த்திருக்கும் பாக்கியம் வாய்த்திருக்கிறது எனக்கு. ,.. ——————————————————- என் இதயத்துடிப்பைக் கேட்டு நீயறிந்த ரகசியங்கள் உன்னுடையதும்தான் … ,.. ——————————————————- அலைந்து திரியும் வெண்மேகங்களின் அழகில் மயங்கி நிற்கிறது மாலை. மறையும் வானில் நிறங்களின் கூடமைக்கும் சூரியனைப் […]

ஜோதிஜியின் “ டாலர் நகரம் “

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

– சுப்ரபாரதிமணியன் ————– படைப்பிலக்கியவாதிகளுக்கு இணையப் பதிவர்கள் மீது ஒரு வகைத் தீண்டாமை குணம் உண்டு. பெரிய தடுப்புச் சுவர் நின்றிருக்கும். பதிவர்கள் தமிழைப்பயன்படுத்தும் விதம், ஹைபிரிட் மொழி , அலட்சியத்தன்மை, குறைந்த வாசிப்பு, தன்னை வெகுவாக முன்னிறுத்தல் இவையெல்லாம் நெடும்கால தவமாய் இருந்து படைப்பிலக்கியம் செய்பவனை புறந்தள்ளும். பதிவர்களிடம் பேச விரும்பாத இலக்கியவாதிகளும் உள்ளனர்.வெகு சிலரே விதிவிலக்கு நான் அவ்வகைத் தீண்டாமையை வெகுவாக அனுஷ்டிக்கக்கூடியவனல்ல. நண்பர் ஜல்லிப்பட்டி பழனிச்சாமி ( ஆனந்த விகடன் குழுமம்) என்னிடம் […]

திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம்

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

வளவ.துரையன் பெருமாள் குடிகொண்ட கோயில்களில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற கோயில்கள் இருக்கும் தலங்களைத் திவ்ய தேசங்கள் என்று வழங்குவர். அவை மொத்தம் 108 ஆகும். அவற்றில் பாண்டிய நாட்டுத் திவ்ய தேசங்கள் என்று 18 திருக்கோயில்களைக் கூறுவர். அங்கு ஆழ்வார் திருநகரி அருகில் உள்ள 9 கோயில்களை நவதிருப்பதிகள் என்று வழங்குவர். அவற்றுள் திருக்கோளூர் எனும் பெயர் பெற்ற திவ்யதேசம் மிக முக்கியமான ஒன்றாகும். இது ஆழ்வார் திருநகரிக்குத் தென்கிழக்கே சுமார் இரண்டு கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 78 இக்கண ஆர்வத்தில் என் சிந்திப்பு

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 78 (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (This Moment Yearning & Thoughtful) இக்கண ஆர்வத்தில் என் சிந்திப்பு மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இக்கண ஆர்வத்தில், ஏகாந்தியாய் என் சிந்திப்பு ! எனக்குத் தெரியுது வேறு நாடுகளிலும் அதுபோல் ஆர்வமுள் ளோரும் சிந்திப் போரும் இருப்பார். எதிர்நோக்கலாம் நானவரது வரவுக்கு இத்தாலி, ஜெர்மெனியில் ஃபிரான்ஸ், ஸ்பெயினில், […]

கவிஞர் ஆதிராஜின் ‘தேவி’ – சிறு காவியம் – ஒரு அறிமுகம்

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

– வே.சபாநாயகம். சோலை அருகாவூர் கவிஞர் ஆதிராஜ் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையை நினைவூட்டும் அற்புதமான மரபுக் கவிஞர். எளிய இனிய தமிழ்நடையில், சந்த அழகுடன் ஆற்றல்மிகு சொல் நயம்மிக்க கவிதை பாடுவதில் வல்லவர். ‘தேவி’ அவரது இரண்டாவது சிறு காவியம். சமண மத போதனையை அடிப்படையாகக் கொண்ட கதையை தன் கவித்திறத்தால் தெவிட்டாத இனிய காவியமாக்கி இருக்கிறார். ‘அகிம்சையைப் பேணும் சீலம் அன்புடன் கருணை உள்ளம் சகிப்புடன் சமம் புரத்தல் சத்தியம் காக்கும் தீரம் பகிர்ந்திடும் பரந்த […]

இயக்கி

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

சத்யானந்தன் அசையாது மேசையில் ஆசிரியர் பிரம்பில் அது இருந்தது அரை நொடியில் தொட்டுச் செல்லும் அவள் மான் நோக்கில் விடுப்பு விண்ணப்பம் கிடப்பில் இருக்கும் மேலதிகாரி மேசை இழுப்பறையில் அழைப்பைப் புறந்தள்ளும் கைபேசிகளில் இந்த அறையின் குளிர்சாதன தொலைவியக்கியில் இருக்கத் தான் செய்கிறது உயிர்துடிப்பு இல்லாமல்

தொடுவானம் 19. காதலும் வேண்டாம்! நட்பும் வேண்டாம்!

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

டாக்டர் ஜி. ஜான்சன் நல்ல வேளையாக அப்போது பள்ளி விடுமுறை. பள்ளி திறக்கும் வரை எப்படியாவது சமாளித்துக்கொள்ள வேண்டும். பள்ளி திறந்ததும் வகுப்பு ஆசிரியரிடம் நடந்ததைச் சொல்லி புதிய ‘ ரிப்போர்ட் ” புத்தகம் பெற வேண்டும். அதன் பின்பு தமிழ் ஆசிரியர், உடற் பயிற்சி ஆசிரியர்களிடம் மீண்டும் அவர்களுடைய நற்சான்றுகளை எழுதச் சொல்ல வேண்டும். அவர்கள் நிச்சயம் உதவுவார்கள். தலைமை ஆசிரியர் மீண்டும் கையெழுத்து இடுவாரா என்பதில்தான் சந்தேகம் எழுந்தது. இது நிச்சயம் வகுப்பு மாணவர்களுக்கு […]

கவிக்கு மரியாதை

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

  சித்ரா சிவகுமார் யாழி படகு விழா, சீனாவில் டுவன் வூ, கான்டன் பிரதேசங்களில் டுஅன் இம் என்று அழைக்கப்படும் படகுப் போட்டி விழா, சீனாவிலும், ஹாங்காங்கிலும், தைவானிலும் மிகவும் புகழ்பெற்ற நாடறிந்த பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும் விழா.  சீனர்கள் இல்லாத நாடே இல்லை என்று சொல்லலாம்.  அவர்கள் இருக்கும் அனைத்து நாடுகளிலும் இன்று இவ்விழா சிறப்பாக எடுக்கப்பட்டு வருகிறது என்று கூடச் சொல்லலாம். நம் நாட்டில் கேரள மாநிலத்தில் சிறப்பாக நடக்கும் படகுப் போட்டிப் போன்று, ஆண்டு […]