இயக்குனர் மிஷ்கின் – தமிழ் ஸ்டுடியோ நடத்தும் இரண்டு நாள் சினிமாப் பயிற்சிப் பட்டறை

நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோ இயக்கத்திற்கு நிதி திரட்டும் விதமாக இரண்டு நாட்கள் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்திக் கொடுக்க இயக்குனர் மிஷ்கின் முன்வந்துள்ளார். இந்த பயிற்சியின் மூலம் கிடைக்கும் பணம் முழுக்க தமிழ் ஸ்டுடியோவின் செயல்பாடுகளுக்காகவே இயக்குனர் மிஷ்கின் கொடுக்க முன்வந்துள்ளார். திரைக்கதை மற்றும் இயக்கம் ஆகிய இரண்டு துறை சார்ந்தும் எதிர்வரும் செப்டம்பர் 26, 27 (சனி, ஞாயிறு) இரண்டு நாட்களும் சென்னையில் இந்த பயிற்சிப் பட்டறை நடக்கவுள்ளது. இந்த பயிற்சியில் சேர விரும்பும் நண்பர்களுக்கு சிறிய நேர்காணல் இருக்கிறது. பயிற்சிக் கட்டணம், பயிற்சி நடைபெறும் இடம் உள்ளிட்ட மற்ற தகவல் பயிற்சியில் கலந்துக்கொள்ளும் நண்பர்களுக்கு தெரிவிக்கப்படும். உங்கள் சினிமா ஆர்வம் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர, நல்ல சினிமாவை நோக்கி தமிழ்சினிமாவில் ஒரு அலை உருவாக, நண்பர்கள் அவசியம் இந்த பயிற்சியில் இணைய வேண்டும்.

தொடர்புக்கு: 9840698236

Series Navigationபுத்தனின் விரல் பற்றிய நகரம் கவிஞர் அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் அடங்கிய தொகுப்பு. தோழமை பதிப்பக வெளியீடு நூல் வெளியீட்டுவிழா குறித்த சில மனப்பதிவுகள்சினிமாவுக்கு ஒரு “இனிமா”