இழுத்துப் பிடித்து, நழுவித் துள்ளி

 

 

இன்னமும் சரியாய் பேச்சு வராத மூன்று வயது பையன்

சமீபத்திய திரைப்படப் பாடலொன்றைப் பாடிக்கொண்டிருந்தான்.

அடுத்த மாதம் நர்சரி போக வேண்டியவனை

இழுத்துப் பிடித்து உட்கார வைத்து

புத்தகம் ஒன்றைக் காட்டி ‘ஏ’ ‘பி’ என்று சொல்லச் சொன்னாள் அம்மா.

நழுவித் துள்ளிக் குதித்து ஓடிக் கொண்டிருந்தான் பையன்

இன்னொரு பாடலைப் பாடியபடி.

 

o

செல்வராஜ் ஜெகதீசன்

 

Series Navigation10 Day Solo Art Exhibition at Vinnyasa Premier Art Gallery, Chennai on September 1, 2011புத்தன் பிணமாக கிடைத்தான்