உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள் – ஜி ராஜேந்திரன்

:-

 

கிழக்குப் பதிப்பகத்தின் மிக அருமையான நூல் உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள். நம் குழந்தைகளிடம் என்னமாதிரியான திறமைகள் ஒளிந்திருக்கின்றன. அவற்றை நாம் இனங்கண்டு அவர்களை எப்படி வழி நடத்தலாம் என்பதை ஜி ராஜேந்திரன் தகுந்த விளக்கங்களுடன் அளித்துள்ளார்கள்.

 

Constructive Pedagogy பற்றி ( ஆக்கப்பூர்வமான கற்பித்தல் முறை ) கோட்பாட்டில் ஆர்வமுள்ள இவர் ஒரு ஆசிரியர், எழுத்தாளர், கற்பிக்கும் முறைகளிலும் கற்றுக்கொள்ளும் முறைகளிலும் ஏற்படும் பிரச்சனைகளை ஆராய்ந்து வருகிறார்.

 

அறிவு என்றால் என்ன. அறிவும் திறமையும் ஒன்றா, எப்படி வேறுபடுகிறது. நினைவாற்றல், புதியன கற்பது, மரபணுக்கள் மூலம் பதிந்தவை, என பல தலைப்புகளில் ஆராய்ந்து கட்டுரை ஆக்கி இருக்கிறார். மேலும் ஒவ்வொரு குழந்தையிடமும் தனி மனிதரிடமும் உள்ள ஒன்பது வகையாக அறிவையும் வகைப்படுத்தி  முடிவில் என் துறை என்ன துறை என்று அக்குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் அவர்களின் தனிதிறனைக் கண்டுணரும்படிக் கொடுத்துள்ளார்.

 

மனதின் மூளையின் பன்முக அறிவுச் செயல்பாடுகளை வகைப்படுத்தும் அவர். அதன் மூலம் எப்படி ஒருவரின் தனிப்பட்ட திறமையையும் விருப்பமிருக்கும் துறையையும் கண்டறியலாம் என்றும் அதன் மூலம் அவர்களை எப்படி வழி நடத்தலாம் என்றும் கூறுகிறார்.

 

ஒரு குழந்தையிடமே பல்வேறு வகையான அறிவும் கலந்து கொட்டிக் கிடந்தாலும் ஓரிரு துறைகளில் சிறப்பாகச் செயல்பட முடியும் அதை நாம் கண்டறிந்து அவர்களை வழி நடத்த இவர் தந்திருக்கும் பயிற்சிகள் உதவுகின்றன.

 

குழந்தைகளை கல்வியைத் திணிக்கும் மிஷின்களாக நடத்தாமல் இயல்பாக வளர்த்து இயற்கையாகப் பரிணமிக்க இந்நூல் உதவும். தங்கள் குழந்தைகளின் தனித்திறன் கண்டறிய விழைவோர் இந்தப் புத்தகத் திருவிழாவில் மறக்காமல் வாங்க வேண்டியது இந்நூல். படி படி என்று ரொம்பவும் சிரமப்படுத்தாமல் மிக எளிதாக உங்கள் குழந்தையின் தனித்திறன் கண்டறிந்து அவர்களுக்குப் பிடித்தமான துறையில் ஈடுபடுத்தினால் அவர்கள் சூப்பர் ஸ்டார் ஆவார்கள் என்பதை உறுதிபடக் கூறுகிறது.

 

நூல் :-உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள்.

ஆசிரியர் :- ஜி. ராஜேந்திரன்.

பதிப்பகம் :- கிழக்கு

விலை :- ரூ. 65/-

Series Navigationநீரிழிவு நோயும் கால்கள் பாதுகாப்பும்மு. கோபி சரபோஜியின் இரு நூல்கள்: வின்ஸ்டன் சர்ச்சில் 100 மற்றும் மௌன அழுகை