உன்னைக் காண மாட்டேன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

This entry is part 2 of 8 in the series 30 செப்டம்பர் 2018


தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++++

மீண்டும் உன்னைக் காண நான்

விரும்ப வில்லை !

என்னைக் காதலிக்க நீ

முன்பே திட்ட மிட்டாய் என்று

கேள்விப் பட்டேன் !

புரிய வில்லை எனக்கது !

உன்னைக் காண.

ஏன் அழுகிறேன் நான்

எந்த காரண மின்றி

இரவு வேளை களில் ?

தவறானது சரியாக இருக்கலாம் !

நீ சொல்வது

என் செவியில் விழுகிறது.

மீண்டும் உனைக் காண நான்,

விரும்ப வில்லை !

உன் முதுகை எனக்குக் காட்டி நீ

ஒளியை மறைத்தாய் !

ஏன் நடிக்க வேண்டும் நான்

இதயம் முறிந்த பின் ?

காதல் போன பிறகு

அதையும் நான் அறியேன் !

காண விரும்ப வில்லை

நானுன்னை மீண்டும்.

பிறர் கூறவும் கேட்டேன்.

நேசிக்க நீ திட்ட மிட்டாய் என்று !

புரிய வில்லை எனக்கது.

உனைக் காண விரும்ப வில்லை.

மீண்டும்

உனைக் காண விரும்ப வில்லை !

Series Navigationநரேந்திரன் – வார குறிப்புகள் (செப்டம்பர் 30, 2018) இந்துக்கள், சிலைகள், ஜகதி ஸ்ரீகுமார்தொடுவானம் 242. கிராம வளர்ச்சியில் கல்வி
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *