உன் முகம்

உன் முகம் குகையோவியத்தின் மறைக்கப்பட்ட அர்த்தம் போல தெரிகிறது எனக்கு.
நான் அந்த ஓவியத்தை வருடுகிறேன்
குரங்கு மனதால் முதலில்
இரண்டாவது கண்களால்
மூன்றாவது கைகளால்
ஓவியம் தேய்கிறது வருடி வருடி
சுருங்கி விரிகிறது உன் முகம்
உன் பற்கள் பனியென குளிரும் காட்சி கொடுக்கிறது
அந்த கதவுகள் மாசுபட்ட காற்றுடன் சண்டையிடும்போது வெறுமை விரவுகிறது
என் உடலில்லாமல் நான் கடைக்கு எலுமிச்சை வாங்கப்போகும் உணர்வு தொங்குகிறது தூக்கில் தொங்கிய சைக்கோ கொலைகாரனை போல

Series Navigationகள்வன் பத்துகுட்டி (லிட்டில்) இந்தியா