This entry is part 16 of 21 in the series 16 அக்டோபர் 2016

அருணா சுப்ரமணியன் 

நடுச்சாமத்துல கூவுற கோழி ..

உச்சிவெயிலில் ஆடுற மயில் ..

என் பிள்ளை சொக்க தங்கம் 

கால்கட்டு போட்டா சரியாயிடும் 

பிள்ளை பிறந்தா பொறுப்புவரும் 

ஆவணி பொறந்தா டாப்புல வருவான் 

இதுவும் கடந்து போகும் 

காலம் மருந்து போடும் 

என்போர்களே நிறுத்தி கொள்ளுங்கள்…

வதந்திகளை பரப்புபவர்கள் 

கைது செய்யப்படுகிறார்கள்!!!

– அருணா சுப்ரமணியன்
Series Navigationமாயாண்டியும் முனியாண்டியும்வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்?