உயிர்க்கவசம்

– சேயோன் யாழ்வேந்தன்

ஏழைகளின் வாழ்க்கைக்கு
பாதுக்காப்பில்லையென்ற
இழிநிலை இனி இல்லை
“ஹெல்மெட் போட்டுக்கொள்ளுங்கள்”
நீங்கள் அணிந்திருக்கும்
முகமூடிகளின் மீதே அதை
அணிந்துகொள்ளலாமென்று
அரசாங்கம் அறிவித்திருக்கிறது
இதோ வழக்கமாய்
மேம்பாலத்தினடியில் நிற்கும் சித்தாள்
லிப்டுக்காய் காத்திருக்கிறாள்
கையில் ஹெல்மெட்டோடு
seyonyazhvaendhan@gmail.com

Series Navigationதமிழ் இலக்கண உருவாக்கத்திற்கான கோட்பாடுகளும் சமஸ்கிருத இலக்கணங்களின் தாக்கமும்குடிக்க ஓர் இடம்