உய்குர் இனக்கதைகள் (2)

3. எப்போது எண்ணலாம்?

மதியாளன் மிகவும் செல்வந்தராக இருந்த காலம். எல்லோரும் அவருடைய நெருங்கிய நண்பர்களாக ஆக வேண்டும் என்று பெருமுயற்சி எடுத்துக் கொண்டு, போட்டா போட்டி போட்டிக் கொண்டு, அவருடைய நட்பு வட்டாரத்தில் இருக்க விருப்பினர்.

அப்போது ஒரு நாள், ஒருவர் அவரிடம், “நசிர்தின்.. அப்பப்பா.. எத்தனை நண்பர்கள்? உங்களால் அவர்கள் எல்லோரையும் எண்ணிச் சொல்ல முடியுமா?” என்று கேட்டார்.

முடியாது என்பதை தலையை ஆட்டிக் காட்டி விட்டு, “எண்ணுவதா? எல்லோரையுமா? இப்போதைக்கு அது சாத்தியமில்லை. ஆனால் பின்னால் என்னிடம் ஒரு தம்படியும் இல்லாத போது அது எனக்கு சாத்தியமாகும்” என்றார் அமைதியாக.

4. ஆடும் ஓநாயும்

ஒரு நாள் ஒரு அரசாங்க அதிகாரி, ஒரு ஆட்டை ஒரு ஓநாயிடமிருந்து, காப்பாற்றினார். உடனே ஆடு, அவருக்கு அடி பணிந்து, அவரைத் தொடர்ந்து வந்தது. ஆனால் அவர்கள் வீட்டை வந்து அடைந்ததும், அதிகாரி அதைக் கொன்று தின்ன எண்ணி, கொல்ல ஏற்பாடு செய்தார். தன்னைக் கொல்லப் போவதை உணர்ந்த ஆடு, தன்னுடைய முழு பலத்தையும் திரட்டிக் கொண்டு, கத்தியது.

அது கதறியச் சத்தம் மிகப் பெரிதாக இருந்ததால், பக்கத்து வீட்டில் குடியிருந்த மதியாளர் நசிர்தின் காதில் இடியென ஒலித்தது. என்ன நடக்கிறது என்று பார்க்க மதியாளர் அதிகாரி வீட்டிற்கு வந்தார்.

“இந்த ஆட்டைப் பாருங்கள்.. நான் ஓநாயிடமிருந்து காப்பாற்றினேன்” என்றார் பெருமிதத்துடன்.

“அப்பயானால், எதற்கு அது உன்னைச் சபிக்கிறது?” என்றார்.

“சபிக்கிறதா?” என்று கேட்டார் அதிகாரி.

“ஆமாம்.. அது உன்னையும் ஓநாய் என்கிறது.. சரி தானே..” என்றார் மதியாளர்.

Series Navigationபில்லா -2 இருத்தலியல்பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-10)