உரிமையில் ஒன்றானோம்

 

 

சொற்பக் கூலிக்கு

பல கோடி மதிப்புப்

பொதிகளை இடம்

மாற்றும் கூலிக்கு

கடனே நிரந்தரம்

பணி அல்ல

இந்தத் தேர்தலுக்குப் பின்னும்

 

அவரது சயன அறை

மற்றும் ஒரே தோழனான

கட்டை வண்டியை விட

அதிகம் ஒன்றும் பெரிதல்ல

குடும்ப இருப்பிடம்

 

எனக்கிணையான

உரிமை அவருக்கும் உண்டு

வாக்களிக்க

 

இவர்களுக்கான

என் சொற்கள்

அனல் பறக்கும்

என்பதைத் தவிர

இவரது வாழ்க்கையுடன்

எனக்குத்

தொடர்பேதுமில்லை

இன்னும் கூர்மையாய்

என் எழுத்தைத்

தீட்டுகிறேன்

 

தனது சாணைக்கல்

தீப்பொறியைத்

தாண்டி

கனல் கக்கும்

எதையும் நம்பவில்லை

சக்கர வண்டியைத்

தோள் மாற்றி மாற்றி

சுமக்கும்

கூர்மைக்காரர்

Series Navigation‘ சொற்கள் – எதிர்ச்சொற்கள் ‘ — நூல் அறிமுகம் !இலக்கிய சிந்தனை 2015 ம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள்