உள்ளங்கையில் உலகம் – கவிதை

Spread the love

 

 

கே.எஸ்.சுதாகர்

 

நிமிர்ந்து நில் – வானம்

உனக்குத்தான்.

சுழலுகின்ற உலகம் – உன் கைகளில்

 

காதலும் கத்தரிக்காயும்

கடைந்தெடுத்த பூசணிக்காயும்

காகிதத்தில் கவிதைகள்

 

நீண்ட இரவும் தெருநாயின் ஓலமும்

நிணமும் சதையும்

நிதமும் கவலைகள்

 

பரமார்த்தகுருவின் சீடர்கள்

காவி உடை தரித்து

பார் ஆளுகின்றார்கள்

 

முகத்துக்கு புகழ்மாலை கழுத்துக்கு

பூமாலை புறமுதுகுக்கு விஷமிட்ட

கத்தி – என மனிதர்கள் விலாங்கு

மீனாகப் பழகிக் கொண்டார்கள்

 

காலம் மாறிய கடுகதி வேகத்தில்

கலி கூப்பிடுதூரம் – நாளொரு நாடு

நடுக்கடலில் அணு பிளக்கும்

 

ஓர் பொழுதில் உள்ளங்கையில்

‘மவுஸ்’ அழுத்தி ஒரு ‘க்ளிக்’ செய்தே

உலகத்தைப் பிளக்கும் வரை

 

நி

மி

ர்

ந்

து

 

நி

ல்

அப்புறம்

வானம்

மட்டும்தான் உனக்கு!

 

Series Navigationகண்ணாமூச்சிபுகலிட  தமிழ் சிறுகதை இலக்கியத்தில் முருகபூபதியின் வகிபாகம்