Articles Posted by the Author:

 • சிவகாமி, யாழினி இணைந்து எழுதிய `வாழ்வின் பின்நோக்கிய பயணமிது’

      கே.எஸ்.சுதாகர் இந்தப் புத்தகம் `மறுயுகம்’ வெளியீடாக (maruyuham@gmail.com) 2019 ஆம் ஆண்டு வந்திருக்கின்றது. ஈழத்தமிழ் இனத்தின் விடுதலை வேண்டி, விடுதலைப் போராட்டக்களத்தில் இருந்த சிவகாமி, யாழினி ஆகிய இருவரும் சேர்ந்து எழுதிய புத்தகம் `வாழ்வின் பின்நோக்கிய பயணமிது’. எல்லாளன் ராஜசிங்கம்.(ரஞ்சித்), மக்கள்நல மருத்துவ சங்கத்தலைவர் இசிதோர் பெர்னாண்டோ (புதுக்குடியிருப்பு) ஆகிய இருவரும் நூலுக்கு முன்னரை எழுதியிருக்கின்றார்கள். 1984 இல், இந்தியாவில், ரெலோவில் (TELO)—தமிழ் ஈழ விடுதலை இயக்கம்— ஏற்பட்ட உட்கட்சிப்பிளவு காரணமாக 13 ஆண்களும் […]


 • `என்னைப் பார்க்க வருவீர்களா?’ – சிறுகதை

  `என்னைப் பார்க்க வருவீர்களா?’ – சிறுகதை

      கே.எஸ்.சுதாகர் ஞாயிற்றுக்கிழமை. காற்று சூறாவளி போல கதவு ஜன்னல்களை அடித்து, செந்தில்வாசனின் உறக்கத்தைக் கலைத்தது. அவுஸ்திரேலியாவின் காலநிலை மனிதர்களை நள்ளிரவிலும் உறக்கம் கொள்ள விடாது. பாதி விழிகள் மூடியிருக்க, அருகேயிருந்த தனது கைபேசியைத் தடவி எடுத்தார் செந்தில்வாசன். ஏதாவது மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றனவா எனப் பார்த்துவிட்டு முகப்புத்தகத்திற்குத் தாவினார். “ரீ வைச்சிருக்கிறன். ஆற முதல் குடியுங்கோ!” சொல்லிவிட்டு, பிள்ளைகளை ரியூசனுக்கு அனுப்புவதில் முனைந்தார் மனைவி உமா. முகநூலைத் தட்டிக்கொண்டு வந்த செந்தில்வாசன் பேயறைந்தது போலானார். முகப்புத்தகத்தில் […]


 • இது காதல் கதை அல்ல!

  இது காதல் கதை அல்ல!

      கே.எஸ்.சுதாகர் சனிக்கிழமை மதியம். சாப்பாட்டு மேசையில் அப்பாவும் அம்மாவும், தமது மகனுடன் சேர்ந்து உணவருந்துவதற்காக, அவனது வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். வெளியே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கின்றது. நண்பர்களுடன் சுற்றிவிட்டு வந்திருந்தான் மகன். கொஞ்சம் பதட்டமாகவும் இருந்தான். “அப்பா… இப்ப உங்களுக்கு வயது அறுபதைத் தாண்டிவிட்டுது. நீங்கள் உங்கட முதுமைக்காலத்தில உடம்புக்கு முடியாத வேளையில எங்கை இருக்க விரும்புறியள்?” சாப்பாட்டு மேசையில் வட்டமாகச் சுற்றியிருந்து உணவருந்திக் கொண்டிருந்த வேளையில், திடீரென்று அப்பாவைப் பார்த்து […]


 • நெருடல்

  நெருடல்

    கே.எஸ்.சுதாகர்   நள்ளிரவு, நாய்களின் ஓலம் சருகுகளின் சலசலப்பு நான்கு சுவர்களுக்குள் படுக்கை என்றாலும் நடுக்கம்தான் வருகிறது.    இது குளிரின் நடுக்கமன்று, குண்டின் நடுக்கம். பக்கத்து அறையில் அம்மா, தங்கை முன் விறாந்தையில் அப்பா, தம்பி ஓர் கணம் கிரிசாந்தி கமலிட்டா வந்து போனார்கள்.   ஓர் நெருப்புக் குச்சியேனும்  கிடைக்காதாவென தானாகக் கைகள் தலையணைக்குள் நீளுகையில் நான்கு ‘பூட்ஸ்’ ஒலிகள் நகர்ந்து போயின.   பாட்டொன்றை முணுமுணுத்துப் பாடுவதிலிருந்து, அவர்களுக்கும் பயம் இருப்பது  தெரிகிறது.   நேற்று முன் தினம் கோப்ரல் […]


 • உள்ளங்கையில் உலகம் – கவிதை

  உள்ளங்கையில் உலகம் – கவிதை

      கே.எஸ்.சுதாகர்   நிமிர்ந்து நில் – வானம் உனக்குத்தான். சுழலுகின்ற உலகம் – உன் கைகளில்   காதலும் கத்தரிக்காயும் கடைந்தெடுத்த பூசணிக்காயும் காகிதத்தில் கவிதைகள்   நீண்ட இரவும் தெருநாயின் ஓலமும் நிணமும் சதையும் நிதமும் கவலைகள்   பரமார்த்தகுருவின் சீடர்கள் காவி உடை தரித்து பார் ஆளுகின்றார்கள்   முகத்துக்கு புகழ்மாலை கழுத்துக்கு பூமாலை புறமுதுகுக்கு விஷமிட்ட கத்தி – என மனிதர்கள் விலாங்கு மீனாகப் பழகிக் கொண்டார்கள்   காலம் […]


 • எனக்கான வெளி – குறுங்கதை

  எனக்கான வெளி – குறுங்கதை

    கே.எஸ்.சுதாகர் ஷொப்பிங் சென்ரரில், சண்முகத்தையும் தேவியையும் கடந்து ஒரு பையனும் பெண்ணும் விரைந்து போனார்கள். அன்றாடம் பழகிய பெண்ணின் முகம் போன்றிருந்தது தேவிக்கு. “உதிலை போறது வைஷ்ணவிதானே!” கணவனிடம் கேட்டாள் தேவி. “கொரோனா வந்து, மாஸ்க் போட வைத்து, மனிசரை மனிசரே அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் கிடக்கு” சலிப்படைந்தார் சண்முகம். அந்தப் பெண்ணும் இவர்களையே திரும்பித் திரும்பிப் பார்த்தபடி சென்றாள். தேவியும் தன்னைப் பார்ப்பதைக் கண்டவுடன், நடையை நிறுத்தினாள். அந்தப் பையனிடம் ஏதோ சொல்லிவிட்டு, இவர்களை […]


 • நிர்மலன் VS அக்சரா – சிறுகதை

  நிர்மலன் VS அக்சரா – சிறுகதை

  கே.எஸ்.சுதாகர் “நிர்மலன்….. என்ன காணும்…. வந்த நேரம் தொடக்கம் ஒரே யோசனையா இருக்கின்றீர்?” நிர்மலனின் தோளை இறுகப் பற்றி புளியமரக் கொப்பை உலுப்புவது போல உலுப்பிவிட்டுச் சிரித்தார் தவராசா. புளியம்பழங்கள் ஒன்றும் உதிர்ந்து விழவில்லை. மாறாக வெறித்த பார்வையுடன் தவராசாவை உற்று நோக்கினான் நிர்மலன். “நிர்மலன்… குளிச்சுப்போட்டு சாப்பிட வாரும். வெளிக்கிட்ட நேரத்திலையிருந்து நல்ல சாப்பாடும் சாப்பிட்டிருக்கமாட்டீர்” என்றார் தவராசாவின் மனைவி ஈஸ்வரி. நிர்மலன் இலங்கையிலிருந்து ஒன்பது மணி நேரம் வான் பறப்பை மேற்கொண்டு, தனது திருமணத்திற்காக […]


 • தரப்படுத்தல்

  தரப்படுத்தல்

  குள்ளமான தோற்றம். வயது எழுபதிற்கு மேல் இருக்கலாம். தளர்வான நடை. வேட்டி, நாஷனலுடன் ஆமை போல ஊர்ந்து கொண்டிருந்தார் கதிரைமலை ஆசிரியர். பாடசாலை கேற்றிலிருந்து மைதானத்தை நோக்கி நடந்துகொண்டிருந்த அவரை இடைமறித்தாள் பார்வதி. அவளின் சேலைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு நின்றான் கோபாலன். “சேர்! என்னுடைய மகன் கோபாலன் பள்ளிக்கூடத்துக்கு எடுபட்டிருக்கின்றான். பாடசாலைக் கட்டிட நிதிக்கு 500 ரூபா கொடுத்திட்டு பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்படி கடிதம் வந்திருக்கு.” “உம்… சேர்க்கிறதுதானே!” “எங்களிட்டை அவ்வளவு காசு இல்லை. அவரும் தோட்ட வேலைதான் […]


 • மாலை – குறும்கதை

  மாலை – குறும்கதை

  மதுரை மீனாட்சி அம்மன் கோவில். ஆனந்தனும் மல்லிகாவும் முதன்முறை தரிசனத்திற்காக வருகின்றார்கள். அம்மனுக்கு எத்தனை கோபுரங்கள். அவர்களை வசதியாக கோபுர வாசலுக்கு அண்மையில் இறக்கிவிட்டு, “நீங்கள் உள்ளே போய் தரிசனத்தை முடித்துக்கொண்டு வாருங்கள். நான் காரை எங்காவது ஓரிடத்தில் நிற்பாட்டிவிட்டு இந்த இடத்தில் வந்து நிற்கின்றேன்” சாரதி சொல்லிக்கொண்டே காரை வசதியாக நிறுத்துவதற்கான இடம் தேடிப் புறப்பட்டான். ஒரே சனக்கூட்டம். எங்கு பார்த்தாலும் மனிதர்கள் ஆரவாரமாகத் தெரிந்தார்கள். கோவிலுக்கு எந்தப் பக்கத்தால் போவது? கோபுரம் இருந்த திசை […]


 • சினிமாவிற்குப் போன கார்

  சினிமாவிற்குப் போன கார்

  “சார்… உங்களுடைய காருக்கு சினிமாவில் நடிக்க சான்ஸ் ஒண்டு கிடைச்சிருக்கு. சம்மதமா?” சினிமாத்துறையைச் சார்ந்த  ஒருவர் சாந்தனிடம் ரெலிபோனில் கேட்டார். சாந்தனின் உற்ற நண்பன் ஒருவன் மூலம் இந்த வாய்ப்பு சாந்தனுக்குக் கிட்டியது. சாந்தன் சுற்றுலாப் பயணிகளை தனது காரில் சுற்றிக் காண்பிப்பவன். கிலோமீட்டருக்கு 15 ரூபாய்கள் வீதமும், ஒரு நாளைக்கு குறைந்தது நானூறு கிலோமீட்டர்களுக்கு மேல் பயணம் செய்வீர்களாயின் – சாரதிக்கான உதவித்தொகை 300 ரூபாய்களும் அவனுக்குக் கொடுக்க வேண்டும். காருக்கான எரிபொருள், மற்றும் அவனுக்கான […]