உள்ளது இல்லாதபடியான அச்சுப்பிரதி

_ ’ரிஷி
(
லதா ராமகிருஷ்ணன்)

Matt இல்லை Gloss என்பதாலோ என்னவோ
முகப்பு அட்டையிலுள்ள அவருடைய முகத்தில்
அறிவு தகதகத்துக்கொண்டிருக்கிறது _
அவராலேயே ஏற்றுக்கொள்ளமுடியாத அளவு.

வெறுப்பின் இருள் எப்போதும் மண்டியிருக்கும் 
அவருடைய விழிகளில்தான் எத்தனை பரிவும் நேயமும்
Photoshop finishing என்பது இதுதானோ…?

படித்துமுடித்துவிட்டேன் என்கிறார் பக்கத்திலிருந்தவர்.
பிடித்திருக்கிறதா? என்று கேட்காமலிருக்கமுடியவில்லை.

’பிரமாதம்! எத்தனை கண்ணியமாக வாதங்களை 
முன்வைத்திருக்கிறார்’ என்கிறார்.

’எத்தனை கவனமாக அவருடைய சொற்பொழிவுகளின் இழிசொற்கள், வன்மச்சொற்கள் வக்கிரச்சொற்கள் விலக்கப்பட்டிருக்கின்றன’ 
என்று சுட்டுகிறேன்.

சட்டென்று என் தலையைப் பிடித்து சுவற்றில் முட்டி
விரோதியாய் முறைத்தவாறு விலகிச் செல்கிறார்.

  •  
Series Navigationபூகோள உயிரினத்தைச் சீர்கெடுக்கும் சூடேற்றக் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பெருகி வருகின்றன.என்னவளே